Keele Viluvathu Pol Kanavu Vanthal
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல ஆன்மீக தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் கனவு பலன் ஒன்றினை பற்றி பார்க்கலாம் வாங்க. அதாவது, கனவில் திடீரென ஒரு உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவதுபோல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஒரு அர்த்தங்களை கொண்டிருக்கும். இதனால் நமக்கு ஏதேனும் கனவு தோன்றினால் அதனை நம் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் நான் கண்ட கனவிற்கு என்ன பலன் என்று கேட்டு தெரிந்துகொள்வோம். எனவே, அந்த வகையில், நீங்கள் கீழே விழுவது போல் கனவு காண்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா..?
மேலே இருந்து கீழ் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
கீழே விழுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு பொருள் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதாவது, நீங்கள் வியாபாரம் செய்கிறீகள் என்றால் உங்களுக்கு வந்துகொண்டிருந்த வருமானம் திடீரென குறையும். அல்லது ஏதேனும் முதலீடு செய்து உள்ளீர்கள் என்றால் அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாகும்.
மேலும், நீங்கள் ஏதேனும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்றால் அதனை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
நீங்கள் செய்யக்கூடிய அனைத்து செயல்களையும் நிதானத்துடன் செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. அதனை மீறி நீங்கள் ஏதேனும் செய்தால் அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்றும் அறிவுறுத்துகிறது.
ஆகவே, மேலிருந்து கீழே விழுவது போல் கனவு வந்தால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிந்துகொண்டு அதற்கேற்ப செய்லபடுதல் வேண்டும்.
கனவில் திடீரென மேலிருந்து கீழே விழுவது, படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுவது, உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது இதுபோன்ற கீழே விழும் கனவுகள் அனைத்தும் உங்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
பிறர் தள்ளிவிட்டு விழுவது போல் கனவு வந்தால்:
பிறர் உங்களை ஒரு இடத்திலிருந்து கீழே தள்ளிவிடுவது போல் கனவு கண்டால் உங்களை ஒரு கடினமான சூழ்நிலையை நோக்கித் தள்ளுகிறது என்றும், உங்களை சுற்றி உள்ளவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுருத்துகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |