கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

Advertisement

கேட்டை நட்சத்திரம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தின் குணங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம் கேட்டை நட்சத்திரம் என்பது 18ஆவது  நட்சத்திரமாகும். புதன் பகவானை அதிபதியாக கொண்டது கேட்டை நட்சத்திரம். ஜோதிடத்தில் கிரக நிலைகளை பொருத்தும் ராசி, நட்சத்திரத்தை பொருத்தும் ஒருவரின் வாழ்க்கை நிலை மாறுகிறது என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோட்டை கட்டுவார்கள் என்றும் பழமொழியில்  சொல்லப்படுகிறது. மேலும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் சிறந்த குணாதிசயங்களை பற்றி படித்து அறியலாம் வாங்க..

விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் பலன்கள்

கேட்டை நட்சத்திரம் குணங்கள்:

  • கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண்களுக்கு குழந்தைத்தனம் அதிகம் இருக்கும்.
  • இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாவே இருப்பார்கள். நண்பர்களை அதிகம் விரும்பும் குணமுடையவர்.
  • புதிய ஆராச்சி, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றை அதிகம் விரும்புவீர்கள்.
  • பேச்சி திறமையால் அனைவரையும் கவர்ந்துவிடுவீர்கள்.
  • நியாபகம் மறதிகள் அதிகம் காணப்படும்.
  • எழுதும் எழுத்துக்கள் அழகாக இருக்கும்.
  • எந்த ஒரு செயலிலும் திட்டமிட்டு செயல்படுவார்கள்.
  • சாமர்த்திய குணங்கள் அதிகம் இருக்கும்.
  • சந்தேக குணங்கள் அதிகம் இருக்கும்.
  • காதல் திருமணம் இவர்களுக்கு பிடிக்கும்.
  • பிடிக்காதவர்களிடம் கோவமாகவே இருப்பார்கள்.
  • சூதுவாது இல்லாமல் பேசும் குணம் உள்ளவர்.
  • நகைச்சுவையை விரும்புவார்கள்.
  • கவிதை எழுதுவதை அதிகம் ரசிப்பார்கள்.

வாழ்க்கை நிலை:

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாம் காலதாமதமாக இருக்கும். வாழ்க்கையில் பல  போராட்டங்களை கடந்து செல்லும் நிலைகள் ஏற்படும். பயணங்கள் அதிகமாவே இருக்கும். வாழ்க்கையில் குழப்பங்கள் அதிகமாவே இருக்கும். மற்றவர்களை பழிவாங்குவதில் ஆர்வமாக இருப்பீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரிய பதவியில் தான் இருப்பார்கள்.

கேட்டை நட்சத்திரத்தின் அதிர்ஷ்டம் தரும் பலன்கள்:

அதிர்ஷ்டம் எண்கள்:

1,5,8 இந்த தேதிகளில்  நல்ல முடிவுகள் எடுத்தால் வெற்றிகள் வந்து சேரும்.

அதிர்ஷ்டம்கலர்:

பச்சை

அதிர்ஷ்டம் கல்:

மரகதம் என்னும் பச்சை கல்.

நட்பு ராசிகள்:

சிம்மம், ரிஷபம், துலாம் போன்ற ராசியினரிடம் நட்பாகவும், பாசமாகவும் இருப்பீர்கள்.

பெயர் எழுத்துக்கள்:

நே, ய, இ, யூ போன்ற எழுத்துக்களில் பெயர் வைப்பது நல்லது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement