நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

Kettathu Kidaika Kal Uppu Pariharam

நினைத்தது நிறைவேற வேண்டுமா? இதனை உடனே செய்யுங்கள் ! Kettathu Kidaika Kal Uppu Pariharam

பொதுவாக உப்பை லட்சுமி தேவியின் வடிவம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தான் சுப காரியங்களுக்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு தண்ணீரிலேயே தொன்று, தண்ணீரிலேயே மாறுகிறது. மனிதர்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருந்து வருகிறது. ஆக நாம் அந்த பிரச்சனையை எதிர்கொள்ள கடவுளை வழிபடுவதும் உண்டு. நாம் எந்த பிரச்சனைக்கு என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனையில் இருந்து நீங்க முடியும். ஆக நாம் வகையில் உண்டாகும் பிரச்சனைகளை சரி செய்ய உப்பு ஒரு சிறந்த பரிகாரம் ஆகும். சரி இந்த பதிவில் நாம் கேட்டதெல்லாம் கிடைக்க கல் உப்பை நம் வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

கேட்டது கிடைக்க கல் உப்பு பரிகாரம்:

நினைத்த காரியங்கள் நிறைவேற:

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள் பின்பு அதில் உப்பு போட்டு நீங்கள் தூங்கும் இடத்தில் வைத்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

சிறிது உப்புக் கல்லை கையில் எடுத்துக் கொண்டு. நீங்கள் நினைத்ததை சொல்லிப் பாருங்கள் பின்பு கண்டிப்பாக இருபத்தொரு முறை சுற்றினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். பின் இந்த உப்பு கல்லை நீரோட்டம் உள்ள இடத்தில் போட்டு விடுங்கள்.

மனதில் தோன்றும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்க:

கல் உப்பை தண்ணீரில் கரைத்து டென் மேற்கு திசையில் தெளித்து வருவது மிகவும் சிறந்தது. ஆக இரு டம்ளரில் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் கல் உப்பை சேர்த்து தென் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதினால் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.

கல் உப்பு நீர்:

கடல் உப்பை நீங்கள் தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பதால் உங்களுக்கு நல்ல சுபிட்சம் ஏற்படும். ஆக தினமும் காலையில் எழுந்தவுடன் கல் உப்பை நீரில் கரைத்து வீடு முழுவதும் தெளிப்பது சிறந்தது இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெற முடியும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த முறையை மின்பற்றா வேண்டும் மற்ற அனைத்து நாட்களிலும் செய்து வருவது சிறந்து.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

தென் மேற்கு திசையில் கல் உப்பு:

வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கள், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிட, வீட்டின் வருமானம் அதிகரிக்க, வீட்டில் உள்ள எதிற்மறை ஆற்றல்கள் நீங்கி, நேர்மைறை ஆற்றல்கள் பெறுக, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக தென் மேற்கு திசையில் கல் உப்பைக் கொஞ்சம் கொட்டி வைப்பது நல்ல பலனைத்தரும்.

வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் தீர:

உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும் பொழுது நம் பிரச்சனைகளும் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. இதனால் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். வெள்ளிக்கிழமையில் இதை செய்து வைத்தால் அடுத்த வெள்ளிக்கிழமையில் கொண்டு போய் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். பின் மறுபடியும் இதே போல் செய்ய வேண்டும் இப்படி செய்வதினால் வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்