கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம்..

Advertisement

கேது பெயர்ச்சி 2023

ராசியில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்கு பெயர்ச்சி அடையும். இந்த மாதம்  இன்றைய தினம் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். கேது பகவான் அசுப கிரகமாக கருதப்படுகிறது. கேது பகவான் ஒரு ராசிக்குள் நுழைந்தார் என்றால் அவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கும் உள்ளாகும். அதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் கேது பெயர்ச்சியால் பாதிக்க பட போகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு கஷ்டகாலம்:

அடுத்த மாதம் 4 கிரக பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நல்லது தெரியுமா.?

மீனம்:

மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதுவரை இருந்த பிரச்சனைகளை விட இந்த கால கட்டத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். ஏதேனும் நோய்களில் நீங்கள் பாதிக்கப்படலாம்.

மகரம்:

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நீங்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் அதில் வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதனை சமாளிப்பதற்கான தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும். இந்த கால கட்டத்தில் நீங்கள்  மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவீர்கள். இதனை தவிர்ப்பதற்கு வெளியே செல்லலாம், இல்லையென்றால் பிடித்தமானவற்றை செய்து உங்களின் மனதை திசை திருப்ப வேண்டும். பணியிடத்தில் உங்களின் பெயர் பாதிக்கப்படும்.

கன்னி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி வாழ்க்கையை பெரிதும் பாதிக்க போகிறது. உங்களின் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படும். பணவரவு சுமாராக தான் காணப்படும். பணத்தை கவனமாக கையாள்வது அவசியமானது. பண விஷயத்தில் பார்த்து செலவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஏனென்றால் உங்களின் பேச்சால் உறவில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

சனி பகவானின் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கபோகுதாம்.  இதுல உங்க ராசி இருக்கானு பாருங்கப்பா 

கடகம்:

கடகம்

கடக ராசியில் கேது நான்காம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த கால கட்டத்தில்  தாயின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் கவலை அடைவார்கள். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. இந்த நிலைமையானது படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் பணியிடம் மற்றும் குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கவனமாக பேச வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசி

கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையை பாதிக்க செய்கிறது. ஏனென்றால் உங்களின் துணையுடன் நிறைய பிரச்சனை ஏற்படும். அப்போது நீங்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். படிக்கும் மாணவர்களாக இருந்தால் படிப்பில் ஆர்வம் குறைவாக காணப்படும். உங்களின் பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படும். அதானல் குழந்தைகளின் நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்.

மகாலட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமான ராசிக்காரர்கள் இவர்கள் தான்..உங்க ராசி இருக்கா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement