கோமாதா பூஜை செய்யும் முறை..!

Advertisement

Ko Poojai Seiyum Murai In Tamil

கோமாதாவை வழிபட்டு வந்தாள் குடும்பம் செழிக்கும் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள். வீட்டில் கோமாதா சிலையை வைத்து வழிபட வேண்டும். கோ பூஜையை வாரம் தோறும் வெள்ளி கிழமை செய்வார்கள். இல்லையெனில் மாதத்திற்கு ஒரு முறையாவது கோ பூஜை செய்து வழிபடுவது குடும்பத்திற்கு நல்லது. வருடத்திற்கு ஒரு முறை அதாவது மாட்டு பொங்கல் அன்று கோ பூஜை செய்வது மிகவும் சிறப்பு  வாய்ந்தது.

மாடு வைத்திருப்பவர்கள் வீட்டில் வெள்ளி கிழமை கோ பூஜை செய்து வழிபடுவார்கள். மாடு இல்லாதவர்கள் வீட்டில் கோமாதா சிலை வைத்து வழிபடலாம். நிறைய பேர்க்கு கோ பூஜை செய்யும் முறை தெரியவதில்லை அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. சரி இப்பொழுது கோ பூஜை செய்முறையை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

கோமாதா 108 போற்றி..!

கோ பூஜை செய்யும் முறை:

கோமாதாவின் உடல் முழுவதும் அனைத்து தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும் குடி கொண்டிருப்பதாக நமது புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வகையில் கோமாதாவின் பின் புறத்தில் தான் மகாலட்சுமியின் இடம் இருப்பதாக கருதப்படுகிறது. கோமாதாவை தொடர்ந்து வணங்கி வந்தாலே நமது பிரச்சினைகள் தீர்ந்து வீடு எப்போதும் செல்வச் செழிப்புடன் இருக்கும்.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் கோமாதா பூஜை செய்வது அனைத்து செல்வ வளங்களை அள்ளித் தரும். வெள்ளிக்கிழமை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை வாங்கி கொடுப்பது பித்ரு தோஷம் நீங்கி எவ்வாறு நமக்கு நன்மையை அளிக்கிறதோ அது போதும் பசுவை குழந்தையாய் பாவித்து அதற்கு அருகம்புல் வாங்கி உண்ணக் கொடுப்பது நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து புண்ணிய பலன்களை கொடுக்கும்.(உங்கள் வீட்டில் காமதேனு படம் இருந்தால் அந்த படத்தை சுவற்றில் சாய்ந்தபடி வைத்துவிட்டு, அந்த படத்திற்கு முன்பு இந்த தட்டை வைத்து விடுங்கள் அவ்வளவுதான்.)

ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள், குங்குமம், சந்தனம் மூன்றையும் ஒன்றாக தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளுங்கள். அந்த தட்டில் காமதேனு சிலையை வைத்து அதன்முன் வெந்தாமரை வைக்க வேண்டம். காமதேனுவிற்கு அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து 108 முறை ‘ஸ்ரீ காமதேனு நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி, குங்குமத்தை எடுத்து காமதேனுவுக்கு முன்னால் இருக்கும் வெண் தாமரையில் போட வேண்டும்.

மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். (பூஜை முடிந்த பின்பு அடுத்த நாள் காலை காமதேனுவை தட்டிலிருந்து எடுத்து பூஜை அறையில் வைத்துவிட்டு, தட்டில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.)

பூஜை செய்த குங்குமத்தை பெண்கள் தினந்தோறும் தங்களுடைய நெற்றியில் இட்டுவர வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைவே இருக்காது.

வாரம் வாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்யலாம். முடியாதவர்கள் மாதத்தில் ஒரு முறையாவது வீட்டில் இந்த கோபூஜை செய்து வந்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும்.

கோமாதா சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும்?

ஒரு சிலர் இந்த கோ மாதா சிலையை தனது பூஜை அறையில் எங்கு வைப்பது எந்த திசையை பார்த்து வைப்பது என்ற சந்தேகத்துடன் இருப்பார்கள். கோமாதா சிலையின் முகம் எப்பொழுதும் பூஜை அறையின் மேற்கு திசை நோக்கியும் அதன் வால் பகுதி கிழக்கு திசை நோக்கியும் இருக்குமாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து பூஜை செய்வது வீட்டிற்கு விசேஷ பலனைக் கொடுக்கும்.

கோ தானம் என்றால் என்ன..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement