உங்களில் கோடீஸ்வர யோகம்
பணம் நம்மிடம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும். பணக்காரர் ஆக வேண்டும், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. அதற்காக தான் பாடுபட்டு உழைகின்றோம்.
ஆனால் அத்தகைய நிலை அனைவரும் அடைவது இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த நிலையை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. நமக்கு அந்த வாய்ப்புகள் வருவதை உணர்த்த சில சகுனங்கள் ஏற்படுவது உண்டு. அதனை நாம் நல்ல வழியில் பயன்படுத்தினால் நமக்கு செல்வங்கள் பெருகும். நமக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்து உங்களின் யோகா நிலையை அறிந்து கொள்ளுங்கள்…
கோடீஸ்வர யோகம் வந்ததை உணர்த்தும் கனவுகள்:
கனவுகள் நமது எதிர்காலத்தை நமக்கு சூசமாக விளக்கும் என்பது நம்பிக்கை. நாம் கனவில் தோன்றும் ஒவ்வொரு நிகழ்வும் நாம் எதிர்கால திட்டத்தின் அடிகோல் ஆகும். அந்த வகையில் உங்களின் கோடீஸ்வர யோகம் பற்றி உங்கள் கனவுகளில் தோன்றும் அறிகுறிகள் இதோ…
தெய்வங்களை கனவில் காண்பது மிக நல்லது. நீங்கள் செய்யும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி ஏற்பட்டு அதன் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்க போவதை குறிப்பதாக வருவதே தெய்வங்கள் கனவில் வரும் நிகழ்வு.
மீன் கொத்தி பறவை அல்லது நாரையை கனவில் கண்டால் மதிப்பு, மரியாதையுடன் இன்னும் சில நாட்களுக்குள் உங்களுக்கு செல்வமும் பெருக போவதாக அர்த்தம்.
கடம்ப மரங்களை கனவில் காண்பதும் மிக விசேஷமானது. நல்ல ஆரோக்கியம், மரியாதை, செல்வ வளம் கிடைப்பதை குறிக்கிறது.
பசுமாடு, பல்லி, யானை, புறா, இறுதி சடங்கு போன்றவை உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
வெற்றிலை, பூ பழ தட்டு உங்கள் கனவில் அதிகாலையில் வந்தால் நீங்கள் கூடிய சீக்கிரம் உயர்ந்த செல்வ நிலையை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
ஒரு கைப்பிடி கடுகு போதுங்க உங்களின் கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய …
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |