கோளறு பதிகம் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Advertisement

Kolaru Pathigam Benefits in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் நாம் தினந்தோறும் உச்சரிக்கும் கோளறு பதிகம் பாடல் வரிகளின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, கோளறு பதிகம் பாடல் வரிகளை உச்சரிப்பது மிகவும் நல்லது என்று நம்மில் பலபேருக்கு தெரியும். ஆனால், அதனின் பயன்கள் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். அதாவது, கோளறு பதிகத்தை தினந்தோறும் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகளையும், பாடல் விளக்கம் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க.

திருஞானசம்மந்தர் அருளிய கோளறு பதிகம் மொத்தம் 11 பதிகங்களை உள்ளடக்கியது. கோளறு பதிகம் தினமும் பாடுவதால் தீராத வினையும் தீரும். எனவே, கோளறு பதிகத்தை தினமும் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

கோளறு பதிகம் வரலாறு

கோளறு பதிகம் பாடலை பாடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • கோளறு பதிகம் பாடுபவர்களுக்கு நவகிரகங்களோ அல்லது பிற கிரகங்களோ தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையூறு ஏற்படாது.
  • கோளறு பதிகம் தினமும் படிப்பதால் முன்வினைப் பயனால் வரும் துன்பங்களின் வீர்யம் குறையும்.  மேலும், ஏழரைசனி ,ராகு, கேது, அஷ்டமச் சனி இவைகளின் துன்பங்களை சுலபமாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனோபலம் பெருகும்.
  • ஒருவருக்கு கிரக தோஷம், கிரக நிலை சரியில்லதாக போது தினந்தோறும் இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே இப்பாடலின் மிகப்பெரிய அற்புதம் ஆகும்.
  • கோளறு பதிகம் பாடினாலோ அல்லது பிறர் கூற கேட்டாலோ நமக்கு இருக்கும் தீராத கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
  • எவர் ஒருவர் தினந்தோறும் கோளறு பதிகம் பாடலை பாடி வருகிறரோ அவருக்கு ஆயுள் பலம் பெறும். மேலும், வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
  • திருஞானசம்பந்தர் அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகம் குறையும்.
  • முக்கியமாக, புரட்டாசி மாத பிரதோஷ நாட்களில்  இந்த சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை உச்சரிப்பதன மூலம் இன்னும் அதிகமான நற்பலன்களை பெறமுடியும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement