கோளறு பதிகம் பாடல் விளக்கம் | Kolaru Pathigam Vilakkam
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கோளறு பதிகம் பாடல் விளக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. தினமும் கோளறு பதிகம் உச்சரித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம். கோள் என்றால் கொள்ளுதல் என்று பொருள்படும். நம் மனம், சொல், செயல் அனைத்திழும் ஆதிக்கம் செலுத்தும் நவகிரகங்களை என்று அழைக்கிறோம். அறு என்றால் நீக்கு அல்லது விளக்கு என்று பொருள்படும். பதிகம் என்பது பத்து பாடல்களை கொண்ட தொகுப்பு ஆகும். எனவே, கிரகங்களின் ஆதிக்கத்தை விலக்கி நம் வாழ்வில் நன்மைகளை மட்டும் அருளும் பதிகம் கோளறு பதிகம். இப்பாடலை திருஞானசம்மந்தர் அருளி உள்ளார்.
கோளறு பதிகம் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கோளறு பதிகம் விளக்கம்:
முதல் பாடல்:
“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்”
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
இரண்டாம் பாடல்:
“என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க”
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
மூன்றாம் பாடல்:
“உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து”
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
நான்காம் பாடல்:
“மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து”
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
ஐந்தாம் பாடல்:
“நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்”
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
ஆறாம் பாடல்:
“வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்”
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
ஏழாம் பாடல்:
“செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக”
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
எட்டாம் பாடல்:
“வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து”
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
ஒன்பதாம் பாடல்:
“பலபல வேடமாகும் பரனாரி பாகன்”
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
பத்தாம் பாடல்:
“கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு”
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
பதினோராம் பாடல்:
“தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி”
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












