கோ பூஜை மந்திரம் | கோமாதா ஸ்தோத்திரம்

Advertisement

கோமாதா ஸ்தோத்திரம் | கோமாதா மந்திரம் 

பொதுவாக எல்லா விசேஷ நாட்களிலும் கோமாதாவிற்கு பூஜை செய்வார்கள், சொல்லப்போனால் அம்மாவாசை மற்றும் மாட்டு பொங்கல் அன்று மிகவும் வெகு விமர்சியாக பூஜையானது நடக்கும். அனைத்து பசுக்களுக்கும் தாயான காமதேனுவை ஆசைகளை நிறைவேற்றும் விலங்காக மக்கள் கருதுகின்றனர். மும்மூர்த்திகள் உட்பட அனைத்து தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் இருப்பிடம் பசு என்று வேதங்கள் கூறப்பட்டு வருகின்றது. பசுவை தெய்வமாக பாவித்து வழிபடுபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று பலரால் நம்பப்படுகிறது. 

அன்னை காமதேனுவை அல்லது பசுவை வழிபடுவது, அவர்களின் முந்தைய மற்றும் தற்போதைய அவதாரங்களில் அவர்கள் செய்த பாவங்களைப் போக்க உதவுகிறது. இந்த காமதேனுவானது எப்போது வெளிப்பட்டது என்றால் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கிளறி, ஏராளமான ரத்தினங்கள், விலங்குகள் மற்றும் கடவுள்களை வெளிப்படுத்தினர், அந்த கடவுள்களில் ஒன்று தான் இந்த காமதேனு.

இந்த விண்ணுலகப் பசுவால் ஒரு ஆசையின் கருத்தை நிறைவேற்ற முடியும் என்று பலரால் இன்றும் நம்பப்பட்டு வருகின்றது. 

komatha manthiram

கோமாதா மந்திரத்தை மாட்டு பொங்கல் அன்று பசுக்களுக்கு பூஜை செய்யும் பொது இந்த கோமாதா ஸ்தோத்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கக்கூடும்.

komatha manthiram in tamil | கோமாதா பூஜை 

  • ஓம் காமதேனவேநம:
  • ஓம் பயஸ்வின்யை நம:
  • ஓம் ஹவ்யகவ்ய நம:
  • ஓம் பலப்ரதாயை நம:
  • ஓம் வ்ருஷப பத்ன்யை நம:
  • ஓம் ஸௌரபேய்யை நம:
  • ஓம் மஹாலாஷம்யை நம:
  • ஓம் ரோஹிண்யை நம:
  • ஓம் ச்ருங்கிண்யை நம:
  • ஓம் க்ஷரதாரிண்யை நம:
  • ஓம் காம்போஜஜனகாயை நம:
  • ஓம் பப்லஜகாயை நம:
  • ஓம் யவனஜனகாயை நம:
  • ஓம் மாஹேய்யை நம:
  • ஓம் நைசிக்யை நம:
  • ஓம் சபள்யை நம:
  • நானாவித பரிமள பத்ர புஸ்பாணி ஸமர்ப்பயாமி  

இதில் வரும் ஒவ்வொரு நம என்ற எழுந்திருக்கும் நமஹா என்று உச்சரித்து இந்த பசுவும் மந்திரத்தை உச்சரிக்கலாம். அவ்வாறு கோ பூஜை மந்திரம் உச்சரித்தால் உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோமாதா பூஜையின் பலன்கள்:

நாம் கோமாதா பூஜையை மேற்கொண்டால், சில பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம், அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பண கஷ்டம் குறையும்.
  • குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.
  • இந்த கோமாதா ஸ்தோத்திரம் சொல்லி நாம் உச்சரிப்பதால் கேட்ட சக்திகள் நம்மை நெருங்காது.
  • முன்ஜென்மத்து பாவங்கள் நீங்கிவிடும்.
  • பித்ரு தோஷம் முடிவடையும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement