கோவில் சுற்றும் முறை
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் பதிவில் தினமும் ஒரு ஆன்மீக தகவலை தெரிந்து கொண்டு வருகின்றோம். ஏனென்றால், என்னதான் நாம் வாழும் இவ்வுலகம் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறி இருந்தாலும், இன்றும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். நம் அனைவருக்குமே கடவுளின் மீது கண்டிப்பாக நம்பிக்கை இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், பலரும் கடவுள் நம்பிக்கையோடு தான் இருக்கிறார்கள். சரி பொதுவாக நாம் அனைவருமே கோவிலுக்கு சென்றிருப்போம். அப்படி செல்லும்போது எல்லா கோவிலையும் 3 முறை என்று சுற்றி வருவார்கள். ஆனால் ஒவ்வொரு கோவிலையும் எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஒவ்வொரு கோவிலையும் எத்தனை முறை சுற்ற வேண்டும்..?
நாம் எந்த கோவிலை சுற்றி வந்தாலும் அதை இடமிருந்து வலமாக தான் சுற்றி வரவேண்டும்.
சிவன் கோவில்: சிவன் கோவிலுக்கு சென்றால் பிரகாரத்தை 3 முறை சுற்றி வர வேண்டும். அதுபோல 3, 5, 7 என்று ஒற்றை எண்களின் வரிசையிலும் சுற்றலாம். இப்படி சுற்றி வருவதால், நினைத்த காரியம் வெற்றிபெறும். மேலும் செல்வவளம் கிடைக்கும்.
மேலும் சிவன் கோவிலை சுற்றி வரும் முறையை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் சிவன் கோவிலை எத்தனை முறை சுற்ற வேண்டும் தெரியுமா
விநாயகர் கோவில்: பிள்ளையார் கோவிலுக்கு சென்றால் 1 முறை சுற்றி வந்தாலே போதும். இப்படி விநாயகர் கோவிலை சுற்றி வருவதால் நமக்கு இருக்கும் தடைகள் நீங்கி, வெற்றிகள் வந்து சேரும்.
முருகன் கோவில்: முருகப் பெருமானின் கோவிலை 6 முறை சுற்றி வர வேண்டும். இப்படி சுற்றி வந்தால் எதிரிகளை வெல்ல கூடிய திறமையும், சிறந்த ஆற்றலும், செல்வவளமும் கிடைக்கும்.
பெருமாள் கோவில்: பெருமாள் கோவிலை 4 முறை சுற்றி வளம் வரவேண்டும். இதனால் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பணவரவு, லட்சுமி கடாட்சம் போன்றவை கிடைக்கும்.
தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்
அம்மன் கோவில்: அம்பிகை, பராசக்தி, அம்மன் கோவில்களில் 5 முறை சுற்றி வளம் வர வேண்டும். இப்படி சுற்றி வருவதால், வெற்றி, மன அமைதி, தைரியம் போன்றவை கிடைக்கும்.
சூரிய கோவில்: சூரிய பகவான் இருக்கும் கோவிலை 2 முறை சுற்றி வர வேண்டும்.
நவகிரக கோவில்: நவக்கிரக கோயில்கள், விக்ரகங்களை 9 முறை சுற்றி வலம் வர வேண்டும். இப்படி சுற்றி வருவதால் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
இதுபோல தான ஒவ்வொரு கோவிலையும் சுற்றி வரவேண்டும். மேலும் பலர் வேண்டுதலின் காரணமாக பலமுறை சுற்றி வருவார்கள். இது அவரவர்களின் வேண்டுதலை பொறுத்து மாறுபடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |