கோவிலை எத்தனை முறை சுற்றினால் நல்லது

Advertisement

Kovilai Ethanai Murai Sutrinaal Nallthu

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆகையால், நாம் அனைவருமே தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். முக்கியமாக கோவிலுக்கு   சென்று கடவுளை வணங்கிய பிறகு கோவிலை சுற்றி வருவோம். ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கோவிலை 1 முறை 3 முறை என பல்வேறு அளவுகளில் சுற்றி வருவார்கள். ஆகையால், கோவிலை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் நமக்கு ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அதேபோல் கோவிலை சுற்றி வருவதற்கும் ஒரு பலன் இருக்கிறது. அதாவது நாம் கோவிலை சுற்றி வரும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு பலன்கள் இருக்கிறது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு அறிந்து கொள்ளுங்கள்.

கோவில் பிரகாரத்தை சுற்றுவதன் பலன்கள்:

கோவில் பிரகாரத்தை சுற்றுவதன் பலன்கள்

1 முறை:

கோவில் பிரகாரத்தை 1 முறை சுற்றினால் இறைவனை அணுகுதல் பலன்கள் கிடைக்கும். அதாவது, இறைவனிடம் நெருக்கமாக பிராத்தனை செய்வதை குறிக்கிறது.

3 முறை:

கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றினால் மனதில் உள்ள சுமை குறையும். மனதில் அதிக வலிகள் இருப்பவர்கள் கோவிலை 3 முறை சுற்றி வருவதன் மூலம் மனதில் உள்ள கவலை குறையும்.

5 முறை:

கோவில் பிரகாரத்தை 5 முறை சுற்றி வருவதன் மூலம் இஷ்ட சித்தி கிடைக்கும். அதாவது, நீங்கள் விரும்பிய சாதனை, நிறைவு, வெற்றி கிடைக்கும்.

7 முறை:

7 முறை கோவிலை சுற்றி வருவதன் மூலம் காரிய ஜெயம் கிடைக்கும். அதாவது, காரிய தடைகள் நீங்கும். எதிலும் ஜெயம் உண்டாகும்.

9 முறை:

கோவில் பிரகாரத்தை 9 முறை சுற்றி வருவதன் மூலம் சத்துரு நாசம் அழியும்.

11 முறை:

கோவில் பிரகாரத்தை 11 முறை சுற்றி வருவதன் மூலம் ஆயுள் விருத்தி அடையும்.

13 முறை:

கோவிலை 13 முறை சுற்றி வருவதன் மூலம் பிராத்தனை சித்தி உண்டாகும். அதாவது, உங்கள் பிராத்தனை நிறைவேறும்.

15 முறை:

கோவிலை 15 முறை சுற்றி வருவதன் மூலம் தன ப்ராப்தி உண்டாகும்.

17 முறை:

கோவில் பிரகாரத்தை 17 முறை சுற்றி வருவதன் மூலம் தானியம் சேரும்.

19 முறை:

கோவிலை 19 முறை சுற்றிவன் மூலம் ரோக நிவர்த்தி உண்டாகும்.

21 முறை:

கோவிலை 21 முறை சுற்றி வருவதன் மூலம் கல்வி விருத்தி அடையும். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 21 முறை சுற்றுவதன் மூலம் பலன்களை பெறலாம்.

23 முறை:

கோவிலை 23 முறை சுற்றி வருவதன் மூலம் சுக சௌகரியம் கிடைக்கும்.

108 முறை:

கோவில் பிரகாரத்தை 108 முறை சுற்றி வருவதன் மூலம் புத்திர பேரு கிடைக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement