கோவில் வாசல் படியை தாண்டி செல்வது நல்லதா.? மிதித்து செல்வது நல்லதா.?

Advertisement

Kovilil Vasalpadiyai Eppati Kadanthu Sella Vendum

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,. இப்பதிவில் கோவிலில் வாசற்படியை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். அதாவது, கோவிலில் வாசற்படியை தாண்டி செல்வது நல்லதா.? மிதித்து செல்வது நல்லதா.? என்பதை விவரித்துள்ளோம். நாம் அனைவருமே கோவிலுக்கு செல்லும்போது ஒன்னு கோவில் வாசல் படியை மிதித்து செல்வோம் அல்லது தாண்டி செல்வோம். அப்படி செல்லும்போது நம்மில் பலபேருக்கு கோவில் படியை தாண்டி செல்ல வேண்டுமா.? அல்லது மிதித்து செல்ல வேண்டுமா.? என்ற குழப்பம் இருக்கும். இனி அந்த குழப்பம் வேண்டாம். இப்பதிவை முழுவதுமாக படித்து உங்கள் குழப்பத்தை போக்கி கொள்ளுங்கள். மேலும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிலுக்கு செல்லும்போது எப்படி செல்ல வேண்டும்.?

கோவிலுக்கு செல்லும்போது கோவிலுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள் அல்லது பைப்பில் கை கால்களை கழுவி விட்டு தலையில் சில துளிகள் தண்ணீரை தெளித்து விட்டு போக வேண்டும்.

கோவிலுக்குள் செல்லும் முன்பாக கோவில் கலசத்தையும் கோபுரத்தையும் வணங்கிவிட்டு போக வேண்டும். கோவில் படியை வலது கையால் தொட்டு வணங்கி விட்டு கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

ஏன் கோவிலுக்கு செல்லும்போது கோவில் வாசல் படியை தொட்டு கும்பிட்டு செல்கின்றனர் தெரியுமா..?

எது நல்லது.?

கோவில் படியை தாண்டி செல்வது:

கோவிலில் உள்ள படியை தாண்டி தான் செல்ல வேண்டும். ஏனென்றால் கோவிலில் உள்ள படியை தாண்டி செல்வது, நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், குழப்பங்கள், கவலைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் விட்டு விட்டு தூய மனதோடு கோவிலுக்குள் செல்வதை குறிக்கிறது. இதுவே ஐதீகமும் கூட. எந்தவித தீய எண்ணங்களும் இல்லாமல் உன்னை வணங்க வந்துள்ளேன் என்பதாகும். எனவே, கோவிலில் உள்ள படியை தாண்டி செல்வது தான் நல்லது.

கோவில் படியை மிதித்து செல்வது:

இதுவே கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால் நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், குழப்பங்கள், கவலைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் கூடவே கூட்டி கொண்டு, கோவிலுக்குள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேகத்தின் போது பருந்து ஏன் பறக்கிறது தெரியுமா.? இதுதான் காரணம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement