கோவிலில் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா..?

Advertisement

Kovilil Vilakku Etrum Murai

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் அனைவருமே கோவில்களுக்கு சென்றிருப்போம். பெரும்பாலும் இந்து சமயத்தில் கோவிலுக்கு செல்லும் போது கோவிலில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

இந்த வழிபாடு காலம் காலமாக பின்பற்றி வருகிறது. அதுபோல நாம் கோவிலில் விளக்கு ஏற்றும் போது மற்றவர்கள் ஏற்றிய விளக்கு இருக்கும். அந்த விளக்கில் நாம் ஏற்றலாமா..? இந்த கேள்வி பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கோவிலுக்கு செல்லும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் ஏற்றலாமா..? 

மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் ஏற்றலாமா

இந்து சமய கோவில்களில் விளக்கு ஏற்றுவது என்பது ஒரு சிறப்பு வழிபாடு ஆகும். கோவிலுக்கு செல்லும் போது சிலர் விளக்கு வாங்கி கொண்டு செல்வார்கள். அதுபோல சிலர் கோவிலில் மற்றவர் ஏற்றிய அல்லது அணைந்த விளக்கில் விளக்கு ஏற்றுவார்கள்.

ஆனால் இப்படி மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் ஏற்றுவது என்பது தவறான விஷயம் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

நாம் கோவிலுக்கு செல்லும் போது கையில் எண்ணெய், பத்தி, பூ, சூடம் போன்ற போன்ற பூஜை பொருட்களை எல்லாம் எடுத்து செல்வோம். ஆனால் அகல் விளக்கோ அல்லது தீப்பெட்டியோ எடுத்து செல்வோமா..?

சொல்லபோனால் சிலர் விளக்கு, தீப்பெட்டி எடுத்து செல்வார்கள், அதுபோல சிலர் அங்கு இருக்கும் விளக்கில் ஏற்றி கொள்ளலாம் என்று எதையும் வாங்காமல் செல்வார்கள். ஆனால் இப்படி செய்வது தவறு.

 நாம் கோவிலுக்கு செல்லும் போது கையில் மற்ற பூஜை பொருட்களுடன் அகல் விளக்கு மற்றும் தீப்பெட்டி கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். காரணம், நாம் மற்றவர் ஏற்றி வைத்திருந்த விளக்கில் ஏற்றினால் தோஷங்கள் வந்து சேரும்.  அதுபோல அவர்கள் நினைத்த வேண்டுதலும் நிறைவேறாமல், நாம் வேண்டியதும் நிறைவேறாமல் போய்விடும்.  அதனால் மற்றவர்கள் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது.

கோவிலில் மற்றவர்கள் ஏற்றி அணைந்த விளக்கில் நீங்கள் ஏற்ற வேண்டும் என்றால், அந்த விளக்கை சுத்தமாக கழுவி விட்டு விளக்கு ஏற்றி வழிபடலாம். இதுபோன்ற முறைகளை பின் பற்றி வருவது நல்லது.

கோவிலில் விளக்கு ஏற்றும் முறை:

kovilil vilaku etrum murai

நாம்  அனைவருமே  நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழுவதற்கு கோவில்களுக்கு செல்கிறோம். ஆனால் கோவிலில் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.

நீங்கள் கோவிலுக்கு போகும்போது அகல் விளக்கு,  விளக்குதிரி, விளக்கேற்றும் எண்ணெய் மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை எடுத்து செல்லவேண்டும். அடுத்தவரிடம் இரவல் வாங்க கூடாது.

கோவிலில் விளக்கு ஏற்றியதும் மிச்ச எண்ணெயை மற்றவர் விளக்கில் ஊற்ற கூடாது. கோவில் விளக்கில் தான் ஊற்ற வேண்டும்.

கோவில்களில் விளக்கேற்றுவதற்கான இடத்தில்  தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும்போது கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஏற்றுங்கள்.

விளக்கு ஏற்றும்போது பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக்கொண்டு ஏற்றுதல் கூடாது. போன் பேசுவது போன்ற செயல்கள் செய்யாமல் முழுமனதோடு பிராத்தனையில் கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

விளக்கு ஏற்றி விட்டு நீங்கள் ஏற்றிய விளக்கை இறைவனுக்கு தீபாராதனையாக காட்ட கூடாது. இப்படி செய்தால் தோஷம் உண்டாகும்.

மற்றவர் ஏற்றிய விளக்கின் பக்கத்தில் உரசுவது போல் விளக்கு ஏற்றாமல் தள்ளி ஏற்ற வேண்டும்.

 

கோவிலுக்கு செல்வீர்கள் என்றால் இதை தெரிந்து கொண்ட பிறகு செல்லுங்கள்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement