​கிருஷ்ண ஜெயந்தி 2024 எப்போது.? வழிபட உகந்த நேரம் எது.?

Advertisement

​கிருஷ்ண ஜெயந்தி 2024 | Krishna Jayanthi 2024 Date in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி/ஜென்மாஷ்டமி இந்த ஆண்டு எப்போது வருகிறது என்பதை கொடுத்துள்ளோம். விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். பகவான் கிருஷ்ணராக அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி/ஜென்மாஷ்டமி என்று கொண்டாடி வருகிறோம். கிருஷ்ணர் அவதரித்த இந்நாளில், ​கிருஷ்ணருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு கிருஷ்ணரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம்.

அதுமட்டுமில்லாமல், ​கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிப்பட்டு வந்தால், கிருஷ்ணரே நம் வீட்டிற்குள் வந்து அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது. எனவே, இத்தனை நன்மைகளை அளிக்கக்கூடிய கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2024 எப்போது வருகிறது.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

​கிருஷ்ண ஜெயந்தி/கோகுலாஷ்டமி தேதியும் நேரமும் 2024:

கிருஷ்ண ஜெயந்தி 2024

 இந்த ஆண்டு 2024 கிருஷ்ண ஜெயந்தி தமிழ் தேதிக்கு ஆவணி 10 ஆம் தேதியும், ஆங்கில தேதிக்கு ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது.  இந்நாளில் விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். மேலும், கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைத்து வழிபாடு செய்தால் கிருஷ்ணரே வீட்டிற்குள் வந்து அருள் புரிவதாக அர்த்தம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலை நேரத்தில் வழிபடுவதை விட மாலை நேரத்தில் வழிப்படுவது நல்லது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், கிருஷ்ணர் நள்ளிரவில் தான் அவதரித்தார் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை 09.02 AM மணிக்கு அஷ்டமி திதியும், இரவு 09.41 மணிக்கு ரோகிணி நட்சத்திரமும் தொடங்குகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி முழுவதும் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. ஆனால்,  கிருஷ்ணர் நள்ளிரவில் அவதரித்தார் என்பதால், இரவு 12.01 AM மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு பூஜைகளை தொடங்கி, அதிகாலை 12.45 AM மணிக்கு நிறைவு செய்யலாம் என்று கூறப்படுகிறது.  

இப்படி நள்ளிரவில் மேற்கொள்ளப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று கூறுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று, விரதம் இருந்து வழிப்படுபவர்களுக்கு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வா வளம், நிறைவான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

முக்கியமாக, பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து குழந்தை கிருஷ்ணரை வழிப்பாடு செய்து வந்தால் ஓரிரு ஆண்டிற்குள் அந்த கிருஷ்ணரே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம்.

இதற்காக தான் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுகிறார்களா !

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement