கிருஷ்ண ஜெயந்தி பஜனை பாடல்கள்

Advertisement

கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு பாடல்கள் | Krishna Jayanthi Songs Tamil

காக்கும் கடவுள் விஷ்ணு பகவானின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் அவதரித்த தினமான தமிழகம் உள்ளிட்ட ஒரு சில தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் விமர்சையாக  கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நாளில், ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் உறியடி உள்ளிட்ட நிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன. அத்தகைய கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணனை போற்றும் விதமாக கிருஷ்ண விரதங்கள் இருந்து பூஜைகள் செய்கின்றனர்.

அத்தகைய கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் போது கிருஷ்ணனை புகழ்ந்து துதிப்பது அனைவரின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்று கோபால கோபால பாடல் வரிகள் தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

Krishna Jayanthi Gopala Gopala Songs Lyrics in Tamil:

krishna jayanthi padalkal in tamil

கோபாலா கோபாலா கோகுல நந்தன கோபாலா!
நந்த முகுந்தா கோபாலா நவநீத சோரா கோபாலா!

வேணு விலோலா கோபாலா விஜய கோபாலா கோபாலா!
ராதா கிருஷ்ணா கோபாலா ரமணீய வேஷா கோபாலா!

காளிய மர்த்தன கோபாலா கௌஸ்துப பூஷண கோபாலா!
முரளீ லோலா கோபாலா முகுந்தப் பிரியா கோபாலா!

ராதா ரமணா கோபாலா ராஜீவ நேத்ரா கோபாலா!
யசோதா பாலா கோபாலா யதுகுல திலகா கோபாலா!

நளின விலோசன கோபாலா கோமள வசனா கோபாலா!
புராண புருஷா கோபாலா புண்ய ஸ்லோகா கோபாலா!

கனகாம் பரதா கோபாலா கருணா மூர்த்தே கோபாலா!
கஞ்ச விலோசன கோபாலா கஸ்தூரி திலகா கோபாலா !

செல்வ செழிப்பை அள்ளி தரும் ஶ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

Krishna Jayanthi Songs Tamil:

krishna jayanthi bajanai in tamil

வனமாலி ராதா ரமண கிரிதாரி கோவிந்த
வனமாலி ராதா ரமண கிரிதாரி கோவிந்த
நீல மெகா சுந்தரா நாராயண கோபாலா
பக்த ஹ்ருதய மண்தாரா பானு கோடி சுந்தரா
நந்த நந்த கோப பிருந்த நாராயண கோபாலா

இது போன்ற ஆன்மிக பாடல் வரிகளையும் எங்கள் தளத்தை பின்தொடருங்கள்…

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement