கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறைகள் | Krishna Jayanthi Kondaduvathu Eppadi
பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi) என்றாலே கிருஷணர், ராதையாக அலங்கரிக்கப்பட்ட குழந்தைகளும், வீடுகளில் பதியப்பட்ட கிருஷ்ணர் பாதங்களும் தான் நம் நினைவுக்கு வரும். எண்ணற்ற பண்டிகைகள் வந்தாலும் கிருஷ்ண ஜெயந்தி என்றுமே சிறப்பு வாய்ந்ததுதான். அந்த வகையில் இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் 06 அன்று கிருஷ்ண ஜெயந்தி இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டும். அந்த தினத்தில்உங்கள் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் நீங்கள் கோடி புண்ணியங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை. வாருங்கள் உங்கள் வீட்டில் எப்படி கொண்டாடுவதால் உங்களின் செல்வா நிலை அதிகரித்து புண்ணியங்களோடு வாழ்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
எப்படி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது? | கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு:
பூஜை:
மாலை 6.00 – 7.00மணிக்குள் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்தால் ஆலிழை கண்ணன் அடியெடுத்து வைத்து வீடுகளுக்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.
கிருஷ்ணர் துதிகள், மந்திரங்களை உச்சரித்து பூக்களைத் தூவி வழிபடுவது மிகவும் நல்லது.
கிருஷ்ண பாதம்:
நடு இரவில் பிறந்ததாகக் கருதப்படும் கிருஷ்ணனை வரவேற்பதற்காக, வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் பாதங்கள் வரைந்து கிருஷ்ணனை வரவேற்க வேண்டும்.
கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
பலகாரம்:
தேங்காய், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருள்களுடன், கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணெய், அவல் ஆகியவற்றையும், சீடை, முருக்கு, லட்டு, தேன் குழல் போன்ற உணவுப் பொருள்களையும் கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் படைக்கலாம்.
குழந்தை வரம்:
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நம்மைகளை தேடித்தரும்.
கிருஷ்ண ஜெயந்தி விரதம்:
இந்த நாளில் காலை சீக்கிரம் கண் விழித்து குளித்துவிட்டு விரதம் இருப்பது பல விசேஷ பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. இளைஞர்களுக்கு அரசியல் ஞானம் உண்டாகும், நிர்வாக திறன் அதிகரிக்கும், மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும், திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும், வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கி பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டு தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள், புகழ் கூடும், குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
கிருஷ்ண ஜெயந்தி பஜனை பாடல்கள்….
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |