குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா?

Advertisement

தென்மேற்கில் பூஜை அறை வைக்கலாமா – Kubera Moolai Pooja Room

பொதுவாக வாஸ்து சாஸ்திரம் முறை படி நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும்? எந்த அறையில் படுக்க வேண்டும்? எந்த திசையில் என்ன வைக்க வேண்டும் என்ற குழப்பம் பெருமபலன நபர்களுக்கு இருக்கும். அந்த வகையில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் குழப்பம் இது அதாவது குபேர மூலையில் பூஜை அறையை வைக்கலாமா? அல்லது வைக்க கூடாது எனபது.

ஆக அவர்களுடைய கேள்விகளுக்கு இந்த பதிவு கண்டிப்பாக பதிலளிக்கும் வகையில் இன்று நாம் குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாம்? வைக்க கூடாத என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. மேலும் இது போன்ற ஆன்மிகம் மற்றும் வாஸ்து சார்ந்த பதிவுகளை பார்க்க நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தை பார்வையிடுங்கள்.

குபேர மூலையில் பூஜை அறை வைக்கலாமா?குபேர மூலையில் பூஜை அறை

உங்கள் வீட்டில் இருக்கும் குபேர மூலையில் கண்டிப்பாக பூஜை அறை வைக்கலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை. அது உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். இந்த குபேர மூலை வீட்டில் எந்த திசையில் இருக்கும் என்றால், வீட்டின் தென்மேற்கு மூலையை தான் குபேர மூலை என்று சொல்வார்கள்.

இந்த குபேர அறையில் பலர் பூஜை அறை வைக்காமல் வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்திருக்கலாம். அது எந்த அறையாக இருந்தாலும் சரி அந்த அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் குபேர மூலையில் படுக்கை அறை, கழிவறை இது போன்ற அறைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு வேளை குபேர மூலையில் படுக்கையறை, கழிவறை இருந்தால் அந்த வீட்டில் பண கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும்.

அதேபோல் சில வீட்டில் குபேர மந்திரம் ஜிபிக்க கூடாது என்று சொல்வார்கள், இருப்பினும் வீட்டில் குபேர மந்திரத்தை ஜிபிக்கலாம் அதில் எந்த ஒரு தவறுதல் இல்லை. குபேரர் செல்வத்திற்குரியவர் என்பதால் குபேர மந்திரம் சொல்வதன் மூலம் நமது வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் படி படியாக குறைய ஆரம்பிக்கும்.

இது தவிர உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பகுதியும் என்ன மூலை என்று அறிந்து கொண்டு அதற்கு தகுந்தது போல் அந்த அறையை பின்பற்றுங்கள். இப்படி நீங்கள் பின்பற்றினால் அதற்குரிய பலன்களும் உங்களுக்கு கிடைக்க கூடும்.

குபேர மூலையில் நீங்கள் பூஜை அறை வைத்திருந்தால். தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் குபேரருக்கு குபேர விளக்கு ஏற்றி, குபேர மந்திரம் சொல்லி வந்தால் உங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் தொடர்புடைய பதிவுகள் 👇
அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குபேரன் 108 போற்றி
குபேர விளக்கு ஏற்றும் முறை..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement