வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குபேர மூலையில் இந்த பொருளை வைக்காதீர்கள்..! வைத்தீர்கள் என்றால் என்ன ஆகும் தெரியுமா..?

Updated On: April 20, 2023 7:44 AM
Follow Us:
Kubera Moolai Vastu Tamil
---Advertisement---
Advertisement

குபேர மூலை எந்த திசையில் இருக்கிறது..! Kubera Moolai Vastu Tamil..!

பொதுவாக வீடு கட்ட போகிறோம் என்றால் வீட்டை அமைக்கும் போதே சொல்லி விடுவார்கள். அது என்னவென்று கேட்பீர்கள்..! எந்த திசையில் என்ன வைக்கவேண்டும் எந்த திசையை நோக்கி என்ன அறையை வைக்கலாம் என்று நிறைய உள்ளது.! அப்படி முக்கியமாக பார்க்கப்படுவது தான் குபேர மூலை. இந்த மூலையில் வைக்கும் பொருள், அதேபோல் எந்த அறையில் வைக்கலாம் என்பது இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும் அல்லவா..? ஆனால் என்ன பொருள் வைக்க கூடாது அப்படி வைத்தால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரியுமா..? வாங்க எந்த திசையில் என்ன வைக்க கூடாது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

குபேர மூலை எந்த திசையில் இருக்கிறது:

ஒரு வீட்டிற்கு குபேர மூலை தான் மிகவும் முக்கியம். அந்த மூலையில் என்ன பொருளை வைக்கலாம் தெரியுமா..? குபேரன் நமக்கு செல்வத்தை கொடுப்பவர்கள்.  ஆகவே அந்த திசையில் பீரோ மற்றும் பணம் வைக்கும் பொருட்களை அங்கு வைத்து பயன்படுத்தலாம். அப்படி வைக்கும் போது வீட்டிற்கு லட்சமி கடாட்சம் அதிகரிக்கும்.

அப்படி நாம் வைக்க கூடாத பொருட்கள் என்றால் என்ன தெரியுமா..? வீட்டின் வடக்கு திசையை குபேர திசை என்பார்கள். நீங்கள் எப்போதும் வெளியில் சென்று வரும் போது மிகவும் அசதியாக இருக்கும்.   அப்படி இருக்கும் போது நாம் நியாபக மறதியில் வடக்கு திசையில் செருப்புகளை வைப்போம். ஆனால் அப்படி வைப்பது மிகவும் தவறு..! இது இறைவனை அவமதிப்பது போல் இருக்கும். ஆகவே மறந்தும் காலணிகளை கழட்டி வடக்கு திசையில் வைக்காதீர்கள். 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉  வீட்டில் குபேர சிலையை இந்த மாதிரி வைத்து பாருங்கள் உங்கள் வீடுதேடி பணம் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது

 அடுத்து நாம் வீடு கட்டும் போது சில தவறுகளை செய்வோம். அது என்னவென்றால் கழிப்பறை, இந்த கழிப்பறையை மறந்தும் கூட குபேர மூலையில் வைக்காதீர்கள். இப்படி வைப்பதால் மகாலட்சமி வீட்டிற்குள் வருவதை தடுப்பது போல் இருக்கும். 

வடக்கு திசை என்பது நேர்மறை ஆற்றல் அதிகம் காணப்படும். அப்படி காணப்படும் போது வீட்டின் அந்த திசையில் கனமான பொருட்கள், ஆயுதம் போன்ற பொருட்களை வைக்க கூடாது. ஆகவே அதனை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அந்த திசையில் குப்பைகள், அழுக்கு நீர்கள் கூட ஊற்ற கூடாது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉   குபேர மூலையில் என்ன வைக்கலாம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now