குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி ? | kulatheiva valipadu | குலதெய்வத்தை எப்படி வழிபடுவது
குலதெய்வ வழிபாடு: குலதெய்வம் தெரியாதவர்கள் அவற்றை கண்டறிந்து, அதற்கு குலதெய்வம் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குல தெய்வ வழிபாடு இல்லையென்றால் எந்த பலம் இல்லை. அதாவது எவர் ஒருவர் குலதெய்வம் வழிபாடு சிறப்பாக தொடர்ந்து செய்து வருகின்றார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்வதில்லை.குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உள்ளது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் வேறு. ஆனால் அவற்றின் சக்தி ஒரே அளவில் இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி? |
குலதெய்வம் வழிபடும் முறை (Kula Deivam Valipadu):
உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதிக்கு ஏற்ப வருடம் ஒரு முறையோ கண்டிப்பாக, நேரில் சென்று பூஜை செய்து கொள்ளவேண்டும். மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.
குலதெய்வம் வழிபடும் முறை உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.
குலதெய்வம் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்க வேண்டும்.
குலதெய்வ வழிபாட்டை (Kula Deivam Valipadu) முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை அனைவரும் உணர்த்து கொள்ளுங்கள்.
இப்போது நாம் இந்த குலதெய்வ வழிபாடு எப்படி உருவாகியது என்பதை பற்றியும் சில குலதெய்வ வழிபாடு குறிப்புகள் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாங்க..!
குலதெய்வ வழிபாடு குறிப்புகள்: 1
குல தெய்வ வழிபாடு (Kula Deivam Valipadu) கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
குல தெய்வ வழிபாடு குறிப்புகள்: 2
தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே (Kula Deivam Valipadu) ஏற்படுத்தி கொடுக்கிறது.
குலதெய்வ வழிபாடு குறிப்புகள்: 3
குல தெய்வ வழிபாடுதான் (Kula Deivam Valipadu) நாளடைவில் பலரும் வணங்கும் சக்தியுள்ள தெய்வ வழிபாடாக மாறி இருக்கலாம் என்று பிரபல அறிஞர் ஆறு.ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
குல தெய்வ வழிபாடு குறிப்புகள்: 4
இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.
குலதெய்வ வழிபாடு குறிப்புகள்: 5
வீரத்தோடு வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு (Kula Deivam Valipadu) உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
குலதெய்வ வழிபாடு குறிப்புகள்: 6
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
குலதெய்வ வழிபாடு குறிப்புகள்: 7
கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |