குலதெய்வம் வழிபாடு செய்ய உகந்த நாள் 2024
வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். குல செய்வதை வழிபட தனியாக செல்லாமல் நம் உற்றார் உறவினர் மற்றும் நம் உடன் பிறந்தவர்கள் இப்படி நம் குடும்பத்தோடு சென்று வழிபடுவது இன்னும் சிறப்பு. நாம் மற்ற சில கோவில்களுக்கு செல்லும்பொழுது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து அர்ச்சனை மட்டும் செய்து விட்டு வந்து விடுவோம்.
ஆனால் குல தெய்வத்திற்கு பூஜை செய்வதற்கு முன்பு பொங்கல், வைத்து வழிபட வேண்டும். நம் குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தியும் வழிபடலாம். சிலர் அரிசி மாவில் வெல்லம் சேர்த்து மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். நம் வீட்டில் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்தாலும் அதற்கு முன்பு குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. சாதாரணமாக நாம் குலதெய்வத்தை வழிபட சில உகந்த நாள் என்று இருக்கிறது. அதனை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது நாம் இந்த விஷயங்களை செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிட்டும்..!
குலதெய்வம் வழிபட உகந்த நாள் 2024:
அமாவாசை அன்று குலதெய்வ வழிபட மிகவும் சிறந்த நாள் ஆகும். அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.
குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள் பங்குனி உத்திரம். குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளான பங்குனி உத்திரத்தில் குடும்பத்துடன் வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் பேரருளால் வளம் பெறுவீர்.
இது போக பௌர்ணமி தினங்களில் குலதெய்வத்தை வழிபடலாம்.. புரட்டாசி மாத பெளர்ணமியில், குலதெய்வத்தையும் பெருமாளையும் மனதார வழிபட்டு வந்தால், மனதாரப் பிரார்த்தனை செய்தால், மகத்தான பலன்களைப் பெறலாம். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து விடுபடலாம்.
மேலும் அவரவர் வழக்கம்படி குலதெய்வத்தை திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகளில் வழிபடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் சொல்ல வேண்டிய குலதெய்வம் மந்திரம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |