குலதெய்வத்தை கனவில் கண்டால் | Kula Deivam Kanavil Vanthal Enna Palan
பொதுவாக இரவு தூங்கும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு தோன்றுகிறது. அந்த கனவுகள் நமது ஆழ்மனதின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக காணப்படும். அப்படி நாம் காணும் கனவுகளில் சில கனவுகள் ஞாபகம் இருக்கும், சில கனவுகள் முழுமையாக ஞாபகம் இருக்காது.
கனவு முழுமையாக நினைவு இல்லாவிட்டாலும் அதனின் தாக்கம் இருக்கும். கனவில் வந்த நிகழ்வுகள் நமக்கு நடப்பது போன்றும் தோன்றும். அதுமட்டுமில்லாமல் நாம் காணும் கனவிற்கு பலன்களும் உண்டு. நமது ஒவ்வொரு கனவும் நமக்கு ஏதே ஒரு செய்தியை உணர்த்தும் வகையில் அமையும். அதாவது எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமைகளை உணர்த்தி கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் சில கனவுகள் உணர்த்தும். அந்த வகையில் இன்றைய பதிவில் நமது குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
குலதெய்வம் கனவில் வந்தால்:
குலதெய்வத்தை நீங்கள் தொடர்ந்து வழிபாடுபவராக இருந்தால், குலதெய்வத்தை கனவில் காண்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். தடைபட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும் என்பதையும் குறிக்கிறது.
அதுவே குலதெய்வத்தை வழிபாட்டை சரியாக நீங்கள் செய்யவில்லை என்றால், உங்கள் கனவில் குலதெய்வம் வரும். அப்படி வந்தால் நீங்கள் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்பதை குறிக்கிறது.அதுமட்டுமில்லாமல் நீங்கள் வேலையின் காரணமாக குலதெய்வத்தை மறந்து விட்டாலும் அதனை நினைவுபடுத்துவதற்கு குலதெய்வம் கனவில் வருவதுண்டு.
குலதெய்வம் கோவில் கனவில் வந்தால்:
குலதெய்வ கோவிலை கனவில் கண்டால் நீங்கள் மனதில் நினைக்கின்ற காரியம் நல்லபடியாக முடியும் என்பதை குறிக்கிறது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைக்க கூடிய செயல்கள் நிறைவேறும் என்பதையும் குறிக்கிறது.
மேலும் சில சமயங்களில் நீங்கள் மன குழப்பம் அடைவீர்கள. அப்படி மன குழப்பம் அடையும் நேரத்தில் உங்களை தைரியப்படுத்துவதற்கும் குலதெய்வம் கனவில் வந்து உணர்த்தும்.
நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு வெளி வட்டாரத்தில் மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.
தினமும் சொல்ல வேண்டிய குலதெய்வம் மந்திரம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |