குழந்தை பாக்கியம் உண்டாக வியாழக்கிழமையில் மறக்காமல் இதை செய்யுங்க..!

Advertisement

Kulanthai Pakkiyam Pera Pariharam 

ஒரு பெண் தாய்மை அடைவது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை மட்டும் தெரிந்துக்கொண்டால் போதும் அந்த குழந்தையின் மீது எண்ணற்ற பாசமும், கனவுகளும் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு நாம் நினைத்து கொண்டிருப்பதற்கு எதிர் மாதிரியாக சிலருக்கு நீண்ட நாட்கள் திருமணம் ஆகிய பிறகும் கூட குழந்தை பாக்கியம் என்பது இல்லாமலே இருக்கிறது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை படுபவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் உதவியளிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் இன்றைய பதிவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

வீட்டில் செல்வம் செழிக்க எளிமையான கல் உப்பு பரிகாரம்

குழந்தை பாக்கியம் பெற பரிகாரம்:

பொதுவாக நாம் குரு கோவிலுக்கு செல்லும் போது குரு பார்த்தால் கோடி நன்மைகள் என்று கூறுவார்கள். ஏனென்றால் குருவின் அருள் என்பது நமக்கு கிடைத்து விட்டால் நாம் அனைத்து விதமான மகிழ்ச்சியினையும் பெற்ற விடலாம் என்று ஆன்மீகத்தில் கூறுவார்கள்.

குழந்தை பாக்கியம் பெற பரிகாரம்

அந்த வகையில் குழந்தை பேறு உண்டாக நாம் குருபகவானை நினைத்து ஒரு எளிமையான பரிகாரம் செய்ய வேண்டும்.

அதாவது வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று குரு பகவானை நினைத்து விரதம் இருந்து அன்று மாலை கோவிலுக்கு சென்று குரு பகவானுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.

இவ்வாறு விளக்கு ஏற்றும் போதும் குழந்தை பேறு விரைவில் கிடைக்க வேண்டும் என்று மனதில் நினைத்த வேண்டி கொள்ள வேண்டும்.

இத்தகைய பரிகாரத்தை செய்து முடித்ததோடு மட்டும் விட்டு விடாமல் குழந்தை பேறு உண்டாக மருத்துவ ரீதியாகவும் நீங்கள் முயற்சியினை செய்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

செல்வ செழிப்பை அதிகப்படுத்துவதற்கு 5 வெற்றிலை மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement