குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்..!

Kulanthai Pirappathu Pol Kanavu Kandal

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன | Kulanthai Pirappathu Pol Kanavu Kandal

கனவு என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. அதில் வரும் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் அதனை அடி மனதில் நினைக்க கூடிய ஒரு விஷயம் தான் இரவில் கனவாக வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆன்மீக சாஸ்திர படி சொல்வது என்னவென்றால், கனவில் வருவது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு சொல்கிறது, அது அனைத்தையும் தெரிந்துகொள்ள 👉👉 கனவு பலன்கள்..! மேலும் இந்த பதிவில் வாயிலாக கனவில் குழந்தை பிறப்பது போல் வந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால்:

குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் அது வாழ்க்கையில் முன்னேற்றத்தை குறிக்கும். வாழ்க்கையில் முன்னுக்கு வரப்போகிறோம் என்பதை உணர்த்தும்.

சிலருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் இருக்கும். வீடு கட்ட நினைத்தோம்  என்றால் அவர்களுக்கு வீடு கட்ட ஏற்பாடுகள் வரும்.

மேலும் ஒருவரின் முடிவுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம் என்றால் அவர்களிடமிருந்து நல்ல பதில் வரும்.

குழந்தை பிறக்கவேண்டும் என்று காத்திருக்கும் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ அவர்களுக்கு குழந்தை பிறப்பது போல கனவு கண்டால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இரட்டை குழந்தை பிறப்பது போல் கனவு:

புதிய வாய்ப்புகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைந்து நல்ல நிலைக்கு செல்வார் என்பதை குறிக்கும்.

கைக்குழந்தை கனவில் வந்தால்:

சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மேலும் அதற்கான முடிவுகளை எடுப்பீர்கள்.

ஆண் குழந்தைகள் கனவில் வந்தால் என்ன பலன்:

பணிபுரியும் இடத்தில் உயர்ந்த பதவிக்கு செல்வீர்கள்.

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கனவு ஏன் சீக்கிரம் மறந்து போகிறது தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்