குழந்தை பாக்கியம் பெற மந்திரம்
பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய சோகம் என்பது குழந்தை வரம் கிடைக்கப்பெறாத தம்பதிகளுக்கு தான் தெரியும். குழந்தை உள்ளவர்களுக்கு அந்த குழந்தையின் அருமை பெருமைகள் தெரிவதே இல்லை. ஒரு சிலர் தங்களின் குழந்தைகளை தெய்வமாக நினைத்து வளர்த்து வருகிறார்கள். ஆனால் சிலர் தங்களது குழந்தைகளை தகாத வார்த்தைகளைக் கூறி திட்டி வளர்ப்பவர்களும் இங்கு உள்ளார்கள். உங்களின் குழந்தைகளை என்றுமே சுமையாகவோ, பாரமாக நினைக்காதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற வரம். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தாய் பாக்கியம் அளிக்கும் மந்திரத்தை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன மந்திரம் என்றும் அதனை எவ்வாறு கூறி பலனடைவது என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அமாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க
Kulanthai Varam Kidaika Manthiram in Tamil:
குழந்தைகளின் கொஞ்சல் மொழியை கேட்காதவர்கள் தான், குழலின் ஓசையும், யாழின் இசையும் இனிமையானது என்று கூறுவார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. ஆனால், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லையே என்று பலரும் இன்றைய காலகட்டத்தில் வருத்தப்படுகிறார்கள்.
பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வேத சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு முக்கிய காரணம் என்னெவென்றால் நீங்கள் செய்யும் பாவச்செயல்கள் தான்.
ஆனால், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை என்று கருதுபவர்கள், இரண்டு மந்திரங்களை உச்சரித்தால், குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.
அது என்ன மந்திரம் என்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.
சந்தான கோபால மந்திரம் என்பது, குழந்தைக் கண்ணனை வழிபடும் மந்திரமாகும். இந்த மந்திரம் இரண்டு விதமாக உள்ளது.
குழந்தை வரன் கிடைக்க முருகனுக்கு இதை மட்டும் செய்யுங்க
முதல் மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்
தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:
பொருள்:
தேவகி மைந்தனாக இருக்கிற வாசுதேவா, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக்கூடிய பகவானே, எனக்கு நல்ல பிள்ளை கிடைக்க, உன்னை சரண் அடைகிறேன்.
இரண்டாவது மந்திரம்:
தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்
பொருள்:
தேவர்களுக்குத் தேவனே, ஜகந்நாத பகவானே! என் குலம் அபிவிருத்தி அடைய எனக்குச் சீக்கிரமே தீர்க்காயுளுடன் நல்ல குணங்களும் கூடிய பிள்ளையைக் கொடு
இந்த இரண்டு மந்திரத்தைகளையும் பகவான் கிருஷ்ணரை நினைத்து தினமும் 100 முறை கூறி தேன், நெய், கற்கண்டு ஆகியவற்றை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
இதனால் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கெல்லாம் கூடியவிரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட இந்த ஒரு இலை மட்டும் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |