Kulanthai Varam Kidaika
இக்காலத்தில் பல பெண்கள் குழந்தை வரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். திருமணம் ஆகி நீண்ட காலங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லையென்றால் பெண்கள் பல உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். ஆன்மீகத்தில், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பதற்கு சில தடைகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, அத்தடைகளை போக்க சில பரிகாரங்களை மேற்கொள்வார்கள். எனவே, அப்படி நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செல்லக்கூடிய கோவில்கள் நிறைய உள்ளது. அதில் ஒன்றாக விளங்கும் கோவில் பற்றித்தான் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். வாருங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செல்லவேண்டிய கோவில் எது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
குழந்தை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்.?
குழந்தை பாக்கியம் பெற, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு செல்ல வேண்டும். இக்கோவிலில் காசி விஸ்வநாதறும் விசாலாட்சி தாயாரும் பக்தர்களுக்கு அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார்கள். திருக்காந்தல் என்பதே இந்த ஊரின் புராண பெயராக இருந்துள்ளது.
இக்கோவிலில், சிவராத்திரி, பிரதோஷம், தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த கோவிலில் பிராத்தனை செய்தால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீலகிரி மாவட்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ள ஒரே கோவில் இக்கோவில் என்பதால், அதிகமான பக்தர்கள் வந்து சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
குழந்தை வரன் கிடைக்க முருகனுக்கு இதை மட்டும் செய்யுங்க..
குழந்தை வரன் இல்லாதவர்கள், திருமணம் பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு சென்று மனம் உருகி வேண்டி கொண்டால் குழந்தை வரன் மற்றும் திருமண பாக்கியம் கிடைக்கும்.
இக்கோவிலுக்கு சென்று, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு பால், இளநீர் மற்றும் எண்ணெய் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
இக்கோவிலில் விரதம் எடுத்தல், பிறருக்கு தானம் செய்தல் போன்ற காரியங்களை செய்வதன் மூலம் அதற்கான நற்பலன்களை பெறலாம்.
இக்கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமி மற்ற கோவில்களை போலல்லாமல் சின் முத்திரையோடு காட்சியளிக்கிறார். அதாவது, மற்ற மூன்று விரல்களுடன் இணையாமல் ஆள்காட்டி விரல்ஆனது பெருவிரலுடன் இணைந்து இருக்கும். இது ஆணவம், கண்மம் மற்றும் மாயை போன்றவை தருவதை குறிக்கும்.
உபதேசம் பெற, சன்யாசம் பெற மற்றும் ஞானம் பெற இந்த தட்சணாமூர்த்தி சுவாமியை வணங்குவது நல்லது.
திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |