குழந்தை வரன் கிடைக்க முருகனுக்கு இதை மட்டும் செய்யுங்க..

Advertisement

குழந்தை பேறு கிடைக்க பரிகாரம்

ஒரு பெண்ணிற்கு திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. திருமணத்தை பற்றிய ஏராளமான கனவுகளுடன் இருப்பார்கள். திருமணம் நடந்து முடிந்த ஒரு 3 மாதம் அல்லது 6 மாதத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏதும் குட் நியூஸ் இருக்கிறதா என்று கேட்பார்கள். இதற்கு அர்த்தம் என்னெவன்று அனைவருக்கும் புரிந்திருக்கும். சில பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஆனால் சில பேருக்கு குழந்தை பாக்கிய அவ்வளவு ஈசியாக கிடைப்பதில்லை. குழந்தை பாக்கியதிற்க்காக மருத்துவமனையா சென்று அலைவார்கள். அதனால் இந்த பதிவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அதை தெரிந்து கொண்டு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள், குழந்தை வரன் கிடைக்கும்.

குழந்தை வரன் கிடைக்க முருகன் பரிகாரம்:

குழந்தை வரம் தரும் முருகன்

குழந்தை வரன் கிடைக்க முருகனுக்கு செய்ய கூடிய பரிகாரத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த பரிகாரத்தை முதலில் ஆரம்பிக்கும் போது சஷ்டி விரதம் அல்லது விசாகம் நட்சத்திரத்தில் ஆரம்பிப்பது நல்லது.

வீட்டில் ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரம் மட்டும் போதும்.!

வாரந்தோறும் செவ்வாய் கிழமை அல்லது வியாழக்கிழமை ஏதவாது ஒரு கிழமையில் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் செல்லலாம்.

முருகன் கோவிலுக்கு சென்று 33 மண் அகல் விளக்கு வாங்கி கொள்ளவும், அதில் மஞ்சள் திரி போட்டு முருகனுக்கு விளக்கேற்றவும். இந்த விளக்கை ஏற்றி முழு மனதோடு எனக்கு குழந்தை வரன் கிடைக்க வேண்டும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். இந்த பரிகாரத்தை 9 வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். பெண்களால் போக முடியாத நாட்களின் கணவன் சென்று இந்த பரிகாரத்தை செய்யலாம்.

பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான மருத்துவ சிகிச்சையும் சேர்த்து செய்து வந்தால் மட்டுமே பலனை பெற முடியும்.

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி விலக கல் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைய்யுங்கள்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement