குழந்தை வரம் தரும் கடவுள் | Kulanthai Varam Tharum Kovil

Advertisement

குழந்தை வரம் தரும் கடவுள் | Kulanthai Varam Tharum Kovil

Kulanthai Varam Tharum Kovil:- எவ்வளவு தான் செல்வங்கள் இருந்தாலும், அள்ளியணைத்து கொஞ்சி மகிழ்ந்திட குழந்தை செல்வம் இல்லையென்றால், அனைத்தும் இருந்தும் இல்லாதது போலத்தான் என்று நினைப்பவர்கள் நாட்டில் ஏராளமானோர். திருமணம் ஆன ஆணும் பெண்ணும் சந்தான பாக்கியம் பெற்ற பின்னரே தாய், தந்தை என்று பதவியை பெற்று அவர்களது வாழ்க்கையின் முக்கியமான இடத்தை வந்தடைகின்றனர். இருப்பினும் சில பெண்களுக்கு சில காரணங்களினால் தாய்மையடையும் வாய்ப்பு தள்ளி போகின்றது. பலவகையான சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களும் இருக்கின்றன. அவர்களின் வலி மிகுந்த மனக்கவலைகளை போக்க கீழ்கண்ட குழந்தை வரம் தரும் கடவுள்களை தரிசித்து வழிபடுவதன் மூலம் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்:-

pregnant putlur amman

இது ஒரு வித்தியாசமான அம்மன் கோவில் ஆகும். குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இது போன்று குழந்தை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பிராத்தனைகளுக்கு இந்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபடுவதன் மூலம் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும். இந்த அம்மன் பார்ப்பதற்கு கர்ப்பிணி பெண் படுத்திருப்பது போன்று அருள்புரிகின்றாள். அந்த கோவிலில் உள்ள வேப்பமரத்தில் எலுமிச்சை பழம் மற்றும் தொட்டில் ஆகியவற்றை கட்டி மனமுருகி வேண்டினாள் குழந்தை பேரு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆலயம் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கிடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

குழந்தை வரம் தரும் கடவுள் – Kulanthai Pakkiyam Tharum Kovil

ஸ்ரீ சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்:-

arulmigu santhana srinivasa perumal temple

குழந்தை வரம் தரும் கோவில்கள் வரிசையில் அடுத்ததாக தெரிந்துகொள்ள போகிற ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் இது சென்னையில் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று ஸ்ரீ சந்தா ஸ்ரீனிவாசர் என்கிற விக்கிரகத்தை மடியில் வைத்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

கர்ப்பரட்சாம்பிகை கோவில் – Kulanthai Varam Tharum Kovil:

Sri Garbarakshambigai Temple

இந்த கர்ப்பரட்சாம்பிகை கோவில் தஞ்சாவூரில் திருக்கருகாவூரில் அமைந்துள்ளது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை, 48 நாட்கள் தொடர்ந்து இரவில் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு. அதே போல கருவுற்ற பெண்கள் சுகப் பிரசவம் அடைய, அம்பிகையின் அருள்பெற்ற விளக்கெண்ணெயை, அடிவயிற்றில் தடவிக்கொள்வது உரிய பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயம் பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

திருக்கருகாவூர் கோவில் ஸ்தல புராணம்

குழந்தை வரம் தரும் கடவுள் – மாங்காடு காமாட்சி அம்மன்:-

Sri Kamakshi Amman Temple mangadu

மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் ஒன்று தான் இந்த மாங்காடு காமாட்சி அம்மன் கோவில். குறிப்பாக குழந்தை வரம் அருளும் அம்மனாக இந்த சென்னையில் அருள்புரிகிறாள். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ நாட்கள் ஆகும். பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். அதாவது தொடர்ந்து 6 வாரங்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement