Kulanthaigal Nandraga Padikka Pariharam in Tamil
இந்த உலகில் நமது வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்ல வேண்டும் என்றால் நமக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது இரண்டு விஷயங்கள் ஒன்று பணம் இன்னொன்று கல்வி. இதில் முதலாவதாக உள்ள பணத்தை நாம் எந்த வயதிலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் கல்வி என்பதை அதற்குரிய நேரத்தில் மட்டுமே நம்மால் கற்றுக் கொள்ள முடியும். இதனின் அவசியம் புரியாமல் ஒரு சில குழந்தைகள் தங்களின் கல்வியின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தை நன்றாக படிப்பதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண போகின்றோம். உங்கள் வீட்டு குழந்தைகளும் நன்கு படிக்க வேண்டும் அப்பொழுது இந்த பதிவில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.
நல்ல அல்லது நிரந்தர வேலை கிடைக்க தினமும் 5 முறை இதை மட்டும் செய்யுங்கள் போதும்
கல்வியில் சிறக்க பரிகாரம்:
உங்கள் வீட்டில் உள்ள குழந்தை நன்றாக படிப்பதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக இங்கு காணலாம்.
முதலில் இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- சிறிய தட்டு – 2
- பிள்ளையார் சிலை அல்லது படம் – 1
- அரிசி – 1 கைப்பிடி அளவு
- வெற்றிலை – 2
- வெல்லம் – 2
- திரி – 2
- நெய் – சிறிதளவு
- பூக்கள் – சிறிதளவு
மேஷத்தில் உருவாகும் மகா தன ராஜயோகம் இதனால் அதிர்ஷ்டத்தை தன்வசமாக்க போகும் 3 ராசிகள்
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 தட்டில் இருந்து 1 தட்டினை எடுத்து அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் பிள்ளையார் சிலை அல்லது படத்தை வைத்து கொள்ளுங்கள் அதற்கு பூக்கள் வைத்து கொள்ளுங்கள்.
பிறகு மற்றொரு தட்டினை எடுத்து அதற்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் 1 கைப்பிடி அளவு அரிசியை வைத்து கொள்ளுங்கள்.
அதனின் மீது 2 வெற்றிலையை வைத்து அதற்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்து கொள்ளுங்கள். பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 2 வெல்லத்தின் நடுவிலும் விளக்கு ஏற்றுவதற்கு ஏற்றாற்போல குழியாக செய்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனை நாம் வைத்துள்ள 2 வெற்றிலையின் மீது வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அதில் சிறிதளவு நெய்யினை ஊற்றி திரி போட்டு விளக்கை ஏற்றி கொள்ளுங்கள்.
இதற்கும் பூக்கள் வைத்து கொள்ளுங்கள். பிறகு பால் பாயாசம் அல்லது வேறு ஏதாவது நெவேத்தியம் செய்து வைத்து மனமார பிராத்தனை செய்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை தோறும் வரும் குரு ஹோரையில் அதாவது காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் அல்லது மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிக்குள் செய்ய வேண்டும்.
உங்க வீட்டில் என்றும் செல்வம் நிலைக்க இந்த ஒரு பொருள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |