குழந்தைகள் படிப்பில் சிறந்த விளங்க இந்த மந்திரத்தை இரவு கூறினால் போதும்..!

Advertisement

குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்

ஒரு மனிதனுக்கு படிப்பு அவருடய வாழ்க்கையினை மாற்றி அமைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட கல்வியினை பெரும் முறை என்பது நம்முடைய அறிவினை பொறுத்து தான் அமைகிறது. ஏனென்றால் கல்வி என்பது அனைவருக்கும் சமமான அளவில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதனை நல்ல முறையில் கற்று கொள்ள வேண்டும் என்பது நமது திறமை மற்றும் ஆற்றலை பொறுத்து தான் அமைகிறது. ஆனால் இதற்கு மாறாக சில வீட்டில் உள்ள குழந்தைகள் படிப்பின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம் படிக்காமல் இருப்பார்கள். இதுமாதிரி குழந்தைகள் படிக்கவில்லை என்றால் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏதேனும் ஆன்மீக பரிகாரம் அல்லது மந்திரத்தை கூறுவார்கள். அந்த வகையில் இன்று குழந்தைகள் நன்றாக படிப்பதற்கான மந்திரத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

சொந்தமாக நிலம் வைத்திருக்கிறீர்களா..  இதோ வீடு கட்ட எளிய பரிகாரம்… 

குழந்தைகள் நன்றாக படிக்க என்ன செய்ய வேண்டும்:

குழந்தைகளை பொறுத்தவரை இரண்டு விதமாக இருப்பார்கள். அதாவது நல்ல சிந்தனை மற்றும் அறிவு ஆற்றலை கொண்டு சில குழந்தைகள் இருப்பார்கள். அதுவே மற்ற சில குழந்தைகள் எதிலும் பொறுப்புணர்வு மற்றும் கவனம் இல்லாமல் இருப்பார்கள். இத்தகைய இரண்டு முறையும் படிப்பிக்கும் ஒத்து போகக்கூடிய ஒன்றாக உள்ளது.

அதாவது மேலே முதலாவதாக கூறப்பட்டுள்ள முறையில் இருக்கும் குழந்தைகளை பற்றி நாம் எதுவும் சிந்திக்க வேண்டாம். அதுவே இரண்டாவது முறையில் உள்ளவர்கள் என்று பார்த்தால் முதலில் அவர்களுக்கு அனைத்தினையும் தெளிவு படுத்தவோ அல்லது வேறு ஏதேனும் செயல்முறையினை செய்ய வேண்டும்.

குழந்தைகள் நன்றாக படிக்க மந்திரம்

அந்த வகையில் வீட்டில் உள்ள குழந்தைகள் படிக்கவில்லை என்றாலும் அல்லது அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றாலும் ஆன்மீகத்தை பொறுத்தவரை நிறைய பரிகாரம் மற்றும் மந்திரங்கள் இடம் பெற்றுள்ளது.

ஆகவே ஓம் ஆத்ம வித்யா பிரம்ம சரஸ்வதி என்ற சரஸ்வதி மந்திரத்தை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக குழந்தைகள் நேராக படுத்து இருக்கும் போது அவர்களுடைய காதில் 16 முறை குழந்தையின் அப்பா அல்லது அம்மா கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு விநாயகர் கோவிலுக்கு சென்று தேனால் அபிஷேகம் செய்து பின்பு அந்த தேனை குழந்தைகளின் நாக்கில் ஒரு சொட்டு வைக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ள முறையினை பின்பற்றிய கையோடு தினமும் குழந்தைகள் படிப்பிற்கான விடா முயற்சியினையும் செய்து வருவதன் மூலம் குழந்தைகள் படிப்பும், மதிப்பெண்ணும் சிறந்து விளங்கும்.

அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால் சிவபெருமானுக்கு இதை மட்டும் செய்யுங்க..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement