குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்
என்றுமே அழியாத செல்வம் கல்வி மட்டும் தாங்க. ஒரு மனிதன் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவனுக்கு படிப்பு மட்டும் கைகொடுக்கும். எப்படியென்றால் அங்குள்ள மனிதர்களிடம் பேச வேண்டும் என்றால் நமக்கு கல்வி அறிவு முக்கியம். நமது வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கு கல்வி சிறந்ததாக இருக்கிறது. பெற்றோர்கள் படிக்காமல் இருந்திருக்கலாம், அதனால் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்கு மாறாக இருக்கும், ஏனென்றால் குழந்தைகள் அவர்கள் மாதிரியே படிப்பில் மந்தமாக இருப்பார்கள். அதனால் அவர்களை படிப்பில் அதிக கவனம் செலுத்தவும், மார்க் அதிகமாக எடுக்கவும் ஏலக்காயை வைத்து ஒரு பரிகாரத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்:
குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு முதலில் அவர்கள் வடகிழக்கு பகுதியில் அமர்ந்து படிக்க வேண்டும். இந்த பகுதியில் அமர்ந்து படிப்பதனால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
50 அல்லது 54 ஏலக்காயை எடுத்து கொள்ளவும். இந்த ஏலக்காயை பச்சை நூலில் மாலையாக கோர்த்து விடவும்.
சொந்தமாக நிலம் வைத்திருக்கிறீர்களா.. இதோ வீடு கட்ட எளிய பரிகாரம்…
ஏலக்காயை மாலையை புதன் பகவானுக்கு அணிவிக்க வேண்டும். அதனால் எந்த குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த குழந்தையும் புதன் கிழமை தோறும் புதன் பகவான் இருக்கும் கோவிலுக்கு அழைத்து செல்ல வேண்டும். குழந்தை பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
குழந்தையின் கையால் புதன் பகவானுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
இந்த பரிகாரத்தை செய்வதால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் படிப்பில் ஆர்வமும் அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நம்பிக்கையோடு செய்து வாருங்க..
பரிகாரத்தை மட்டும் செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
அரசு வேலை கிடைக்க வேண்டுமென்றால் சிவபெருமானுக்கு இதை மட்டும் செய்யுங்க..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |