குலதெய்வத்திற்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்
இந்துக்கள் முறையில் குலதெய்வம் என்பது இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு கடவுள் குலதெய்வமாக இருக்கிறது. நாம் அனைவரும் ஏதாவது வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்றால் குலதெய்வத்திடம் முதலில் வேண்டுவோம். அது போல வருடத்தில் ஒரு முறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவோம். ஏனென்றால் அப்போது தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பொதுவாகவே கடவுளிடம் ஏதவாது வேண்டி கொண்டால் அதற்கு கைமாறாக இதனை செய்கிறேன் என்று வேண்டி கொள்வோம். ஏனென்றால் அப்போது தான் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அது போல கடவுளிடம் வேண்டி கொண்ட வேண்டுதல் நிறைவேறினால் அதற்கு கைமாறாக தானம் பொருட்களை வழங்குவார்கள். இந்த பதவில் குலதெய்வத்திற்கு தானமாக கொடுக்க கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குலதெய்வத்திற்கு தானமாக கொடுக்க வேண்டிய பொருட்கள்:
குலதெய்வத்திற்கு தானமாக என்ன பொருட்கள் கொடுக்கலாம் என்று பலருக்கும் தெரிவதில்லை. வேண்டுதலை வேண்டி விட்டு என்ன பொருட்கள் வாங்கி கொடுக்கலாம் என்று பலரும் சிந்திப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் குலதெய்வத்திற்கு என்ன பொருட்கள் கொடுக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.
குலதெய்வ கோவிலுக்கு தானமாக 1 கிலோ வெல்லத்தை வாங்கி கொடுக்கலாம். அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம். ஏனென்றால் இந்த வெல்லமானது பிரசாதம் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது:
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போதும் வெல்லத்தை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள். அதுவும் இந்த வெல்லத்தை நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு செல்ல போகிறீர்கள் என்றால் முதல் நாளே வாங்கி வீட்டில் வைத்து கொள்ளுங்கள். வீட்டிலிருந்து தான் இந்த வெல்லத்தை எடுத்து செல்ல வேண்டும்.
துன்பங்கள் விலக வெல்லம்:
உங்களால் மாதம் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியுமென்றால் வெல்லத்தை வாங்கி கொடுங்கள். ஏனென்றால் வெல்ல தானம் கொடுப்பதன் மூலம் வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் இந்த வேண்டுதலை வேண்டும் போதே என்னுடைய கஷ்டம் எல்லாம் கரைய வேண்டும் என்று மனமுருகி வேண்டி கொள்ளுங்கள்.
உங்களுடைய குலதெய்வ கோவிலில் குளம் இருக்குமானால் அங்கு வெல்லத்தை கரையுங்கள். இதனால் உங்களுடைய துன்பம் எல்லாம் கரைந்து விடும்.
குலதெய்வ கோவிலுக்கு செல்ல பரிகாரம்:
குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு நேரமே ஏற்றதாக இருக்காது. அதனால் நீங்கள் வெள்ளை துணியில் மஞ்சளை நினைத்து கொள்ளுங்கள். இதன் உள்பகுதியில் சில்லறை காசு 11 ரூபாய் வைத்து முடிந்து வைத்து கொள்ளுங்கள். இதனை முடிந்து வைக்கும் போது குலதெய்வ கோவிலுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள். இதன் மூலம் குலதெய்வ கோவிலுக்கு சீக்கிரம் சென்று வரலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |