குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்?

Kuligai Neram is Good or Bad in Tamil

குளிகை நேரம் என்றால் என்ன? | Kuligai Neram is Good or Bad in Tamil

Kuligai Neram – பொதுநலம் பதிவுகளை வாசிக்கும் நண்பர்களுக்கு எங்களுடைய அன்பான வணக்கம். இந்த பதிவில் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்வோம். அதாவது நாம் தினந்தோறும் பார்க்கும் காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை மட்டுமே பார்ப்பது வழக்கம். ஆனால் நமது நாள் காட்டிகளில் எல்லாநாட்களிலும் குளிகை நேரம் என்று இருக்கும். இந்த குளிகை நேரமானது நல்லதா? கெட்டதா? இந்த நேரத்தில் நல்ல காரியங்களை செய்யலாமா? செய்ய கூடாதா போன்ற பல கேள்விகள் நம்முள் தோன்றும். குளிகை நேரத்தில் எந்த காரியங்கள் செய்ய வேண்டும்? எந்த காரியங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம்.

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது. இந்த நேரங்களில் நீங்கள் நினைத்த காரியங்களை செய்தால் திரும்பத் திரும்ப பன்மடங்காக வளர்ச்சியடையுமாம். சரி வாரத்தில் உள்ள 7 நாட்களில் குளிகை எந்தெந்த கிழமைகளில், எந்தெந்த நேரத்தில் வருகிறது என்பதை பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.

குளிகை நேரம்:-

கிழமைநேரம்
ஞாயிற்றுக்கிழமைமாலை 03.00 – 04.30
திங்கட்கிழமைமதியம் 01.30 -03.00
செவ்வாய்கிழமைபிற்பகல் 12.00 – 01.30
புதன்கிழமைகாலை 10.30 – 12.00
வியாழக்கிழமைகாலை 09.00 – 10.30
வெள்ளிக்கிழமைகாலை 07.30 – 09.00
சனிகிழமைகாலை 06.00 – 07.30

குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்?

பொதுவாக குளிகை நேரங்களில் தங்க நகை வாங்கலாம். இந்த நேரத்தில் வாங்கப்படும் தங்க நகையானது பன்மடங்காக உங்கள் வீட்டில் பெருகும் என்பது நம்பப்படுகிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

குளிகை நேரங்களில் உங்களுடைய கடன்களை அடைக்கலம். அவ்வாறு கொடுத்தால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும் இதனால் உங்களுடைய கடனை திரும்ப கொடுத்து அந்த கடன் முழுவதும் அடைபடும்படி செய்து விடும்.

குளிகை நேரங்களில் பணத்தை சேமிக்கலாம் அதாவது உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை தினமும் சேமித்து வரலாம். இதனால் உங்களுக்கு பணம் சேர்க்கை அதிகரிக்கும்.

இவ்வாறு நீங்கள் சேமித்த பணத்தை கொண்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம். அதாவது வீடு கட்டப் போகிறீர்கள் என்றால் அதில் இந்த தொகையை சேர்த்துக் கொள்ளலாம். தொழில் துவங்கப் போகிறீர்களா? வியாபாரம் செய்யப்போகிறீரகளா? வண்டி, வாகனம் வாங்க போகிறீர்களா? நிலம் வாங்கப் போகிறீர்களா? இது போன்ற மிகப்பெரிய விஷயத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நீங்கள் செய்ய இருக்கும் காரியங்கள் தடையின்றி சிறப்புடன் நடைபெறும்.

குளிகை நேரத்தில் செய்ய கூடாத விஷயங்கள் என்னென்ன?

குளிகை நேரத்தில் நாம் ஒரு காரியம் செய்கிறோம் அந்த காரியமானது திரும்ப திரும்ப நடைபெறும் என்பதால் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இருவருக்கும் விவாக ரத்து ஏற்படுமாம். மீண்டும் திருமணம் செய்யும் நிலை ஏற்படலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் செய்வதை தவிர்க்கப்படுகின்றன.

ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் எப்படி நல்ல விஷயங்களை தவிர்க்கிறோமோ அதேபோல் குளிகை நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யமாட்டார்கள்.

மேலும் குளிகை நேரத்தில் யாரிடமும் கடன் வாங்காதீர்கள், அப்படி கடன் வாங்கினால் கடனானது அதிகரித்து கொண்டே போய்விடும்.

இதையும் படியுங்கள்–> எந்த ஹோரையில் என்ன செய்யலாம்?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்