Guru Peyarchi Kumbam 2021 to 2022 in Tamil
kumba rasi guru peyarchi 2021 to 2022: அனைவருக்கும் வணக்கம்..! இந்த பதிவில் 2021-ஆம் ஆண்டுக்கான கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்களை பார்க்க போகிறோம். ஒவ்வொரு வருடமும் குரு பெயர்ச்சியானது வரும்போது நம்முடைய ராசிக்கு இந்த வருடம் எது மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறார் என்று தெரிந்துக்கொள்ள நாம் அனைவருமே ஆர்வமாக இருப்போம். கடந்த இரண்டு வருடங்களாக ஏழரை சனியின் ஆதிக்கத்தினால் நல்ல பலன்களை அடையாமல் இருந்து வந்தனர். ஆனால் இந்த குரு பெயர்ச்சியில் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிக பணவரவையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்க போகிறது. இன்னும் இது மாதிரியான என்னென்ன நற்பலன்களை கும்ப ராசிக்காரர்களுக்கு (guru peyarchi 2021 to 2022 in tamil kumbam) கொடுக்க போகிறார் என்று விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 |
கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021:
குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 கும்பம்: இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் வாழ்க்கையில் செட்டில்ட் ஆகுவீர்கள். இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல பலன்களை அடைவீர்கள். இது வரை நடந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உங்களை சுற்றி நேர்மறை எண்ணங்கள் உருவாக போகிறது. இதுவரை உங்களுக்கு நடக்காத நல்ல காரீயம் இனிமேல் நடக்கும்.
தன்னம்பிக்கை: மனதில் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். மனதில் சிந்தனை, செயல்திறன் ஆக்கபூர்வமாக இருக்கும்.
புகழ்: இந்த குரு பெயர்ச்சியில் புகழ், கூடுதல் அந்தஸ்து வரும். கையில் பணவரவு அதிகரித்து மற்றவர்கள் உங்களை மதித்து நடப்பார்கள்.
குணம்: மனதில் ரகசியத்தை வைத்திருக்கக்கூடியவர்கள். சில நேரத்தில் அதிக கோபத்துடன் இருப்பார்கள். துணிச்சலுடன் இருப்பார்கள். மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவார்கள். மற்றவர்கள் மீது அதிக பாசத்துடன் இருப்பார்கள். ஆடம்பர செலவினை செய்யமாட்டார்கள்.
தொழில்: தொழிலில் நல்ல பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வீர்கள். அவர்களின் மூலம் நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு மனதில் நினைத்து போன்று வேலை கிடைக்கும். சில தொழில் முனைவோர்கள் நல்ல அமோக வெற்றியினை அடைவீர்கள்.
குடும்பம்: குடும்பத்தில் புதிதாக வீடு கட்ட வாய்ப்புள்ளது. புதிதாக மனை வாங்குவீர்கள். வாழ்வில் மாற்றம் கண்டிப்பாக நடக்கும். கோவில்களுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படும். குருவின் ஏழாம் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். கணவன் மனைவி உறவுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
யோகம்: உங்களுக்கு வாகன யோகம் நன்றாக இருக்கிறது. உங்களிடம் இருக்கும் பழைய வண்டியை விற்றுவிட்டு புதிதாக இப்போதுள்ள மாடல் வண்டியை வாங்குவீர்கள். உங்களுடைய பேச்சுத்திறமையால் மற்றவர்களை வெல்வீர்கள். மற்றவர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.
மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 |
பாக்கியம்: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். பெண்கள் மிகுந்த மேன்மையை அடைவீர்கள். வீட்டில் சுப காரியம் தடங்கல் இல்லாமல் நடக்கும்.
வேலை: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் நிம்மதி கிடைக்கும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும்.
வருமானம்: பெண்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், சிற்றுண்டி, விடுதி, லாட்ஜ், வாடகை கலைத்துறை டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் வருமானம் வரும். மாமியார் வீட்டின் வாழ்க்கை துணை பங்காக சொத்தோ அல்லது பணத்தொகையோ கிடைக்கும்.
ஆரோக்கியம்: உடல் நிலையும், மன நிலையும் குழப்பம் இல்லாமல் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும். கடந்த காலத்தில் நோயில் இருந்தவர்கள் இப்போது நன்றாக இருப்பார்கள்.
பரிகாரம்: மூத்தவர்களுக்கும், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடி சென்று அவர்களுக்கு செய்து அவர்களுடைய ஆசியினை பெறுங்கள். ஏழை எளியவர்களுக்கு, படிக்கும் மாணவர்களுக்கு, திருமணம் உதவி செய்வது போன்றவை குருவால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்னும் அதிகமாக பெறலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |