கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் (Adi kumbeswarar temple) திருக்கோவிலின் சிறப்புகள்…!

Advertisement

கும்பகோணம் சிவன் கோவில் – ஆதி கும்பேஸ்வரர் (Adi Kumbeswarar temple) கோவிலின் சிறப்பு:

கும்பகோணம் சிவன் கோவில் – ஆதி கும்பேசுவரர் கோவில் (adi kumbeswarar temple) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற சிவன் கோவில் ஆகும். 12-ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் மகாமகம் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த கோவில் 30,181 sq ft (2,803.9 m2) பரப்பளவுடையது. மேலும் இந்த கோவில் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும்.

தஞ்சை பெரிய கோவிலின் தல வரலாறு..!

 

222

கும்பகோணம் ஊரின் பெயர் காரணம்:

இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் பேச்சு வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

கும்பகோணம் கும்பேசுவரர் பெயர் காரணம்:

முன்னொரு காலத்தில் வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது பிரம்மா சிவனிடம், “உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதும், படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது? என கேட்டார்.

சிவன், நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்று செய்து அமுதத்தை நிரப்பு.

அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான சிருஷ்டி பீடத்தை (படைப்புக்குஉரிய மூலப்பொருள்) அதனுள்வை.

அதன் மீது தேங்காயை வைத்து, மாவிலையால் அலங்காரம் செய். அது வெள்ளத்தில் சாயாமல் இருக்க ஒரு உரியில் வை. வெள்ளத்தில் கும்பம் தெற்கு நோக்கி செல்லும். எங்கு தங்குகிறதோ நான் அங்கு எழுந்தருள்வேன், என்றார்.

இதன் படியே கும்பம் ஒரு இடத்தில் தங்கியது. கும்பத்திலிருந்து விழுந்த மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது சிவன் வேடனாக தோன்றி, கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார்.

கும்பத்தின் மூக்கு சிதைந்து, அமுதம் நாலாபுறமும் பரவியது. அமுதத்தோடு கலந்த வெண்மணல் சிவலிங்கம் ஆயிற்று. இவரே “கும்பேஸ்வரர்” என்றும், இத்தலம் “கும்பகோணம்” என்றும் பெயர் பெற்றது.

கும்பகோணம் அருகில் உள்ள கோயில்கள் List – கும்பகோணம் சுற்றுலா

கும்பகோணம் சிவன் கோவில் – ஆதி கும்பேஸ்வரர் சில விவரங்கள்:

மூலவர்:  கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன்/தாயார்:  மங்களாம்பிகை
விருட்சம்: வன்னி
தீர்த்தம்:  மகாமகம், காவிரி
புராண பெயர்:  திருகுடமூக்கு
ஊர்:  கும்பகோணம்
மாவட்டம்:  தஞ்சாவூர்
முகவரி:  அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோவில், கும்பகோணம்., தஞ்சாவூர் மாவட்டம், 612001

 

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இத்தலத்தைப் பற்றி திருக்குடந்தைப்புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவனை போற்றுகிறார். மேலும் இந்தக் கோயில் பற்றிய புராணக்கதைச் செய்திகளைக் காளமேகப் புலவர் ஒரு வெண்பாவில் பாடியுள்ளார்.

புகழ் பெற்றவர்கள்:

இந்திரன் முதலான திக்கு பாலகர்கள், காமதேனு, கார்த்தவீரியன், வீரவன்மன், மாந்தாதா, ஏமவாகுவின் மனைவி, கர்மசன்மா, சுவர்ணரோமன், காசிபர் உள்ளிட்ட பலர் இத்தலத்தைப் பூசித்து புகழ் பெற்றுள்ளனர்.

கும்பகோணம் சிவன் கோவில் – ஆதி கும்பேஸ்வரர் தேரோட்டம்:

தேரோட்டம்இக்கோவிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளி இரு நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 1988க்குப் பிறகு இந்த ஐந்து தேர்களும் சேதமடைந்து ஓடாமல் இருந்தன.

கடந்த 2002 முதல் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. நான்கு மகாமகங்களுக்குப் பிறகு கும்பேஸ்வரர் கோயிலில் (adi kumbeswarar temple) ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது.

ஆதி கும்பேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம் (TIMINGS):

  • காலை 06 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 04 மணி முதல் 09.30 மணி வரை.

கும்பகோணம் சிவன் கோவில் – ஆதி கும்பேஸ்வரர் பிராத்தனை:

கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சித்து வந்தால் வேண்டும் பிராத்தனைகள் நிறைவேறும்.

ஆதி கும்பேஸ்வரர் நேர்த்தி கடனை நிறைவேற்றும் முறை:

அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும்.

ஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement