வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கும்பம் மேஷம் உள்ளிட்ட 3 ராசிக்கு பொற்காலத்தை கொண்டு வரும் புதாதித்ய யோகம்

Updated On: January 13, 2026 3:49 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

கும்பம் மேஷம் உள்ளிட்ட 3 ராசிக்கு பொற்காலம் 

இன்றைய பதிவில் கும்பம் மேஷம் உள்ளிட்ட 3 ராசிக்கு பொற்காலத்தை கொண்டு வரும் புதாதித்ய யோகம் பற்றி பார்க்க போகிறோம். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பொங்கல் தினத்தன்று வலிமையான புதாத்ய யோகத்தின் சேர்க்கை உண்டாகிறது. தனி நபரின் பேச்சாற்றல் அறிவாற்றல் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவரும். ஒரு கிரகமாக புதன் பார்க்கப்படுகிறது. தனி நபரின் தொழில் வளர்ச்சி,நிதி நிலையில் ஏற்றம் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டுவரும் சிறப்பு யோகமாக இது பார்க்கப்படுகிறது. தனுசு ராசியில் உண்டாகும் இந்த புதாத்ய ராஜயோகம் யாருக்கு என்ன பலன் அளிக்கும். எந்த மாதிரியான நற்பலனை அளிக்கும்.என்பதை  பார்க்க போகிறோம்.

மேஷம்:

மேஷம் ராசி கொண்டவர்களுக்கு இந்த புதாத்ய யோகம் .அவர்களின் ஜாதகத்தில் 9 வது வீட்டில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மற்றம் ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆகவே தொழில் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். உங்கள் விருப்பம் போல் பணிகளை விரைவாக முடிக்க உதவி செய்யும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத வெற்றியை உங்களுக்கு கொண்டுவரும்.ரப்பர் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள். அரசின் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் துறையில் உச்ச நிலையை அடைவீர்கள். இதன் மூலம் கூடுதல் பொறுப்பினை பெறுவீர்கள். 

மகரத்தில் வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி பொங்கலுக்குள் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசி

கன்னி :

கன்னி ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் மகிழ்ச்சியான வாய்ப்பினை அதிகரிக்கும் காலமாக இது பார்க்கப்படுகிறது.வரும் பொங்கல் தினத்தில் மாறும் இந்த கிரக நிலை மாற்றம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சியை கொண்டுவரும். குறிப்பாக காதல் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை கொண்டுவரும்.பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளலாம். கன்னி ராசிக்கு இந்த புதாத்ய யோகம் வியாபாரத்தில் போட்டிகளை குறைத்து போதுமான வருமானத்தை கொண்டுவருகிறது. திருமணம் ஆனவர்கள் குழந்தை பாக்கியம் தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கலாம். 

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் 11 வது வீட்டில் மாற்றத்தை கொண்டுவரும் இந்த புதாத்ய யோகம் உங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது. ஏற்கனவே கிடைக்கும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வழிகளை கொண்டுவருகிறது. நிலம் சார்ந்த முதலீடுகளில்’எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தொழிலில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். பொருளாதார நிலையில் கொண்டுவரும் மாற்றங்கள் உங்களின் குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவர எளிதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். 

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now