சனி தரும் ராஜயோகம்
பொதுவாக நம்முடைய வீடுகளில் தெய்வ வழிபாடுகளில் அதிகப்படியான வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருவார்கள். அதுமட்டும் இல்லாமல் யாருக்கும் பயப்படவில்லை என்றாலும் கூட சனி பகவானுக்கு பயப்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஏனென்றால் நமது வாழ்க்கையில் நாம் என்ன மாதிரியான பலன்களை செய்து வருகிறோம் என்பதை பொறுத்து தான் சனி பகவான் நமக்கு பலன்களை தருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சனி பகவான் அவருடைய ராசியினை வருடத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொண்டே இருப்பார். அப்படி பார்த்தால் தற்போது 30 வருடம் கழித்து சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இத்தகை அமைப்பின போது சனி பெயர்ச்சியினால் கேந்திர திரிகோண ராஜயோகம், ஷஷ மஹாபுருஷ் ராஜயோகம் என்ற இரண்டு யோகங்கள் உண்டாகுகிறது. ஆகவே இந்த ராஜயோகத்தினால் 12 ராசிகளில் 3 ராசியினருக்கு மட்டும் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கிறது. அதனால் அது என்னென்ன ராசி என்று விரிவாக கீழே பார்க்கலாம் வாங்க..!
சனி பெயர்ச்சி பலன்கள் 2023:
சனி பகவான் பார்வை படும் ராசி மற்றும் பெயர்ச்சி அடையும் ராசி என ஒவ்வொன்றிற்கும் பல விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் இரண்டு ராஜ யோகங்களினால் 3 ராசியினர் எப்படிப்பட்ட பலனை அடையப்போகிறார்கள் என்று ஒன்றன் கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17-ஆம் தேதி கும்ப ராசிக்கு சென்ற சனிபகவான் 2025-ஆம் ஆண்டு வரை இதே ராசியில் தான் பயணிப்பார். அதனால் அடுத்த 2 வருடங்களுக்கு நல்ல காலம் அமைகிறது.
கும்ப ராசி:
30 வருடங்கள் கழித்து சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தாலும் கூட 2 விதமான ராஜ யோகங்களினால் கும்ப ராசியினருக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கிறது. அதாவது கும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பண வரவு நீங்கள் எதிரிபார்த்த மாதிரியாக இருக்கும்.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் இல்லாத வளர்ச்சி மேலோங்கி காணப்படும். இத்தகைய பலனால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
சிம்ம ராசி:
சிம்மம் போன்ற அமைப்பினை கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் ஆனது அமோகமான காலமாக தான் இருக்கும். அந்த வகையில் எதிர்பார்க்காத அளவிற்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அதேபோல் தொழில் புரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவையும் அமையும் நேரமாக உள்ளது. குடும்பத்திலும், பிள்ளைகளினாலும் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும்.
துலாம் ராசி:
சனியின் 2 விதமான ராஜ யோகங்களினால் துலாம் ராசியினருக்கு நிதிநிலை சிறப்பானதாக காணப்படும். இதுநாள் வரையிலும் இல்லாத அளவிற்கு நிதிநிலை மேலோங்கி இருக்கும்.
ஒரு சிலருக்கு வேலை மாற்றம் அமைந்தாலும் கூட அவை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் முறையாக தான் காணப்படுகிறது. ஆகையால் வாழ்க்கையில் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியினை அளிக்கும் விதமாகவும் இருக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |