வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குங்குமத்தை கனவில் கண்டால் என்ன பலன்..! | Kungumam Kanavu Palangal In Tamil..!

Updated On: December 22, 2025 6:27 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

குங்குமத்தை கனவில் கண்டால் என்ன பலன்..! | Kungumam Kanavu Palangal In Tamil..!

நாம் தூங்கும் போது கனவில் பல்வேறு விஷயங்களை காணுவோம். காலையில் எழுந்திருச்சி அந்த கனவுக்கான பலன்களை தேட ஆரம்பிப்போம். நீங்கள் காணும் கனவுகளுக்கான பலனை தெரிந்துகொள்ள pothunalam இணையதளத்தை பாருங்கள். நாம் காணும் கனவுகளில் நமக்கு நிறைய விஷயங்கள் ஞாபகம் இருக்காது ஒரு சில விஷயங்கள் மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கும். அப்டி ஞாபகம் இருக்கும் விஷயங்களையும் நம் உடன் இருப்பவர்களிடம் கூறி அதற்கான பலனை தேடுவோம்.

கனவுகள் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். நல்ல கனவு கண்டால் அதை நினைத்து மகிழ்ச்சி அடைவோம். இதே கெட்ட கனவு கண்டால் அதை நினைத்து வருத்தம் அடைந்து சோர்வாக இருப்போம். நாம் காணும் கனவுக்கு இணையதளத்தில் அதற்கான பலனை தேடுவோம். உங்கள் கனவில் குங்குமம் வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

கணவன் நீண்ட ஆயுளை பெற எந்த விரலால் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா..?

குங்குமம் கனவில் வந்தால் என்ன பலன்:

  • பொதுவாக குங்குமத்தை கனவில் கண்டால்: வாழ்வில் வளர்ச்சி பெற இருப்பதையும், குடும்பத்தில் யாரேனும் கரு தரிக்க இருப்பதையும், சந்தோசமான தருணம் வர இருப்பதையும், புதிய சூழலுக்கு தகுந்தது போல் வாழ்வில் சில விஷயங்களை மாற்ற இருப்பதையும் குறிக்கிறது. மேலும் இப்படி கனவில் குங்குமம் வரும்போது  மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படுவதற்கான  அறிகுறியாகவும் இது நல்ல செய்திகள் நடக்க இருக்கிறது. என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கிறது.
  • சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ள குங்குமத்தை கனவில் கண்டால்: வாழ்வில் சிறிய இன்ப நிகழ்வுகளை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் கற்பனையாக உங்கள் சொந்த உலகில் வாழ இருப்பதையும், வாழ்வில் வரும் சவால்களை சமாளிக்க இருப்பதையும், நீங்கள் இறக்கத்துடன் பிறருக்காக சில தியாகங்களை செய்ய இருப்பதையும், நல்ல இதயம் கொண்டவராக மாற இருப்பதையும், உங்கள் வாழ்வில் நிலையான முன்னேற்றம் அடைய இருப்பதையும் குறிக்கிறது.
  • மாணவர்கள் குங்குமத்தை கனவில் கண்டால்: உங்கள் பாடத்தை பயில யாரவது உங்களை ஊக்கவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஊக்கத்துடன் பாடத்தை பயிலவும் என்றும் கனவு உணர்த்துகிறது.
  • குங்குமத்தை நெற்றியில் இடுவது போல் கனவு கண்டால்: உங்கள் மனதில் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் ஞானம் வர இருப்பதையும், வாழ்வில் நல்ல அணுகுமுறையை பிறரிடம் வெளிப்படுத்த இருப்பதையும், எதோ ஒரு விஷயத்தை எதிர்கொள்ள பயப்படுவதையும், நல்ல தூய்மையான நட்பு உறவு உங்களுக்கு கிடைக்க இருப்பதையும், வாழ்வில் வரும் மகிழ்ச்சி பொழுதுபோக்கு போன்றவற்றை அனுபவிக்கவும் கனவு உங்களுக்கு உணர்த்துகிறது.
  • திருமணம் ஆனவர்கள் குங்குமத்தை கனவில் கண்டால்: உங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் இருப்பதையும், குடும்பத்தில் அனைவரும் ஒன்று கூடி விழா நடத்த இருப்பதையும், தாராளமான மனப்பான்மையுடனும், மனிதநேயத்துடனும் பிறரிடம் நடந்து கொள்ள இருப்பதையும், புதிய நட்பு உறவுகள் வாழ்வில் இணைய இருப்பதையும் குறிக்கிறது.
  • பச்சை நிற குங்குமத்தை கனவில் கண்டால்: நல்ல ஞானம் தெளிவு உங்கள் மனதில் வர இருப்பதையும், வாழ்வில் உள்ள தடைகளை எதிர்த்து இலக்குகளை நோக்கி வாழ்வில் அடி எடுத்து வைக்க இருப்பதையும், விருப்பம் இல்லாத திட்டங்களை விட்டுவிட அறிவுறுத்தியும், எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை வாழ்வில் அறிந்து செயல்படவும் கனவு உணர்த்துகிறது.
  • ஏதோ ஒரு பெண் குங்குமத்தை உங்களிடம் தருவது போல் லனவு கண்டால்: வாழ்வில் உங்களுடைய பொறுப்புகள் என்ன என்பதை அறிந்து அதை சரியாக செயல்படுத்த கனவு உணர்த்துகிறது.
  • நெற்றி வகுடில் குங்குமத்தை இடுவது போல் கனவு கண்டால்: நீங்கள் கடந்த காலத்தில் நடந்த செயல்களையே எண்ணிக்கொண்டு தன் சொந்த வாழ்வில் நடக்க இருக்கும் விஷயங்களை விட்டுவிடுகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. நீங்கள் ஆன்மீக பாதையிலும், மிகுந்த விழிப்புணர்வுடனும் வாழ்வில் பயணிக்க கனவு உணர்த்துகிறது.
  • குங்குமம் தரையில் சிந்துவது போல் கனவு கண்டால்: நீங்கள் மனக்கொந்தளிப்புடன் இருப்பதையும், நீங்கள் ஓய்வில்லாமல் கடினமாக உழைப்பதனால் சிறிது ஓய்வு எடுக்கவும், பிறரிடம் பேசும் பொழுது கடினமான சொல்லை தவிர்க்கவும், உங்கள் பொறுப்புகளை விட்டுவிட இருப்பதையும், நீங்கள் ஏதோ ஒரு சூழ்நிலையை சமாளிக்க இருப்பதையும் குறிக்கிறது.
  • உங்கள் கணவர் குங்குமத்தை நெற்றியில் இடுவது போல் கனவு கண்டால்: நீங்கள் உங்கள் லட்சியத்திற்காக விடாமுயற்சி செய்து போராடுவதையும், உங்கள் வாழ்க்கை புதிய திசையில் மாற இருப்பதையும், ஆனால் நீங்கள் நம்பிக்கை இல்லாதது போல் உணர்வதையும் குறிக்கிறது.
  • திருமணம் ஆகாத இளம்பெண்ணின் நெற்றியில் யாரோ ஒருவர் குங்குமத்தை இடுவது போல் கனவு கண்டால்: கனவு காணும் இளம்பெண் தான் அறிந்த ஒருவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதை பற்றி குறிக்கிறது.
  • வெற்றிலை தாம்பளத்துடன் மஞ்சள் மற்றும் குங்குமத்தை கனவில் கண்டால்: யாரோ ஒருவரை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்பதையும், நல்ல செய்தி வர இருப்பதையும் குறிக்கிறது.
  • சந்தனம் மற்றும் குங்குமம் கனவில் வந்தால்: கனவில் சந்தனம் மற்றும் குங்குமம் வருவதை காண்பது மங்களகரமான நிகழ்ச்சிகள், மகிழ்வான நிகழ்வுகள் மற்றும்  நல்ல அதிர்ஷ்டத்தை  குறிக்கும். இவை இரண்டும் கனவில் வருவது சுப சகுனமாகவும், நேர்மையான மாற்றங்களையும் அளிக்கிறதை குறிக்கிறது.
  • திருநீறு குங்குமம் கனவில் கண்டால்: கனவில் திருநீறு மற்றும் குங்குமம் கனவில் வருவதை கண்டால் அது தெய்வீக அருள், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல சகுனமாகவும் உங்கள் குடும்பத்தில் நன்மைகள் வரப்போகிறது என்பதையும் குறிக்கிறது.
  • கோவிலில் குங்குமம் வாங்குவதுபோல் கனவு கண்டால்: நீங்கள்  கோவில்களில்  குங்குமம் வாங்குவதுபோல் கனவு கண்டால்  அது ஒரு மங்களகரமான நிகழ்வை குறிக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல செய்திகளையும், வாழ்வில் நல்ல முன்னேற்றங்களையும் அளிக்கிறதை குறிக்கும் .மேலும், இது நல்ல காலம் பிறப்பதையும்,வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதையும் குறிக்கிறது.

குங்குமம் கீழே கொட்டினால் நல்லதா..! கெட்டதா..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now