மஞ்சள் கீழே கொட்டினால் என்ன பலன் | எண்ணெய் கீழே கொட்டினால் என்ன பலன்
ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்தால் அபசகுணமாக நினைப்பது வழக்கம். இப்படி நடந்தால் ஏதோ தடங்கல் என்று கூறுவோம். அப்படி நாம் கை தவறி கீழே கொட்டும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பொதுவாக யாராக இருந்தாலும் ஏதோ ஒரு பொருள் எடுக்கிறோம் என்றால் அவை கைத்தவறி கீழே விழுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த மாதிரி கீழே கொட்டும் பொருட்கள் சில பொருட்களை கொட்டும் போது நம் வீட்டில் முன்னோர்கள் திட்டுவார்கள். எடுத்துக்காட்டாக வெள்ளி அல்லது செவ்வாய் கிழமை குங்குமம் கீழே கொட்ட கூடாது. அவை குடும்பத்திற்கு நல்லதல்ல என்று கூறுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் கீழே என்னென்ன பொருட்கள் கீழ கொட்டினால் என்னென்ன பலன்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
குங்குமம் கீழே கொட்டினால்:
குங்குமத்தை எடுக்கும் போது தவறுதலாக கீழே கொட்டுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. பலரும் குங்குமம் கீழே கொட்டினால் அபசகுனம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் குங்குமம் கீழே கொட்டினால் வெற்றி, அனுகூலம் என்பது அர்த்தமாக இருக்கிறது.
அரிசி கீழே கொட்டினால்:
அரிசி கீழே கொட்டினால் சச்சரவு, காரியத்தடை என்பது அர்த்தமாக இருக்கிறது. நீங்கள் ஏதாவது புதிதாக செயல் செய்யவேண்டுமென்று நினைத்தால் அந்த காரியமானது தடைபட்டு கொண்டே இருக்கும். மேலும் குடும்பத்தில் அல்லது வெளியிலோ சண்டை ஏற்படும்.
மஞ்சள் கீழே கொட்டினால்:
மஞ்சள் கீழே கொட்ட கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறுவார்கள். இந்த பொருள் கீழே கொட்டினால் மங்களம் மற்றும் சிறப்பு என்பது அர்த்தமாக இருக்கிறது.
எண்ணெய் கீழே கொட்டினால் என்ன பலன்:
எண்ணெய் கீழே கொட்டினால் அவச்செய்தி, இழப்பு என்பது அர்த்தமாக இருக்கிறது.
பால் கீழே கொட்டினால்:
பால் வாங்கி வரும் போதே கீழே போட்டு உடைத்து விடுவார்கள். சில நேரங்களில் பூனை தட்டி விட்டு கூட கீழே விழுந்து விடும். இந்த பால் கீழே கொட்டினால் கலகம் மற்றும் தோல்வி என்பது அர்த்தமாக இருக்கிறது.
சர்க்கரை கீழே கொட்டினால் புகழ் மற்றும் மேன்மை என்பது அர்த்தமாக இருக்கிறது.
தேங்காய்:
தேங்காய் கீழே விழுந்தால் உங்களின் செயல்களில் ஏதும் தடைகள் இருந்தால் அவை நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.
பூ:
பூ கீழே கொட்டினால் தேர்ச்சி, பக்தி, நலம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது. அதுவே வாசனை உள்ள பொருட்கள் கீழே கொட்டினால் செல்வம் மற்றும் சுகம் என்பது அர்த்தமாக இருக்கின்றது.
உப்பு:
உப்பு கீழே கொட்டினால் முகத்தில் பருக்கள் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பதை கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் உப்பு கீழே கொட்டினால் பணத்தடை, விரையம் என்பது அர்த்தமாக உள்ளது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |