பணத்தை அள்ளித்தரும் குங்கும பூ மட்டும் போதும்

Advertisement

செல்வம் பெருக மாசி மகம் குங்கும பூ பரிகாரம்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு பெற்ற மாதமாக இருக்கிறது. அதில் மாசி மாதம் சிறப்பு பெற்ற மாதமாக இருக்கிறது. தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதங்களில் மாசி மாதமும் ஒன்றாகும். இந்த மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே மாசி மகம் என்று கொண்டாப்பட்டு வருகிறது. இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகும். பலருக்கும் கடன் பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனை தீர்க்கும் வகையில் இந்த பதிவில் நாளை மாசி மகம் அன்று செய்ய கூடிய பரிகாரத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குங்கும பூ பரிகாரம் செய்வது எப்படி.?

குங்கும பூ பரிகாரம்

பரிகாரம் செய்வதற்கு குங்கும பூ மற்றும் தண்ணீர் தேவைப்படும், அதற்கு மாசி மகம் அன்று காலை முதல் இரவு பொழுதிற்குள் செய்ய வேண்டும்.

ஒரு பவுல் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும், அதில் குங்கும பூவை சேர்த்து கொள்ளுங்கள். இந்த பவுலை பூஜை அறையில் ஒரு நாள் முழுவதும் வைத்து விட வேண்டும்.மறுநாள் காலையில் பூஜை அறையில் வைத்த பவுலில் உள்ள தண்ணீரை வீட்டை சுற்றி தெளித்து விட வேண்டும்.

குங்கும பூவை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும், இதனை பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் வைத்து விட வேண்டும். இதனால் வீட்டில் கடன் பிரச்சனை நீங்கி பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரம் மிகவும் ஈசியானது தான். அதனால் ஒரு முறை செஞ்சு பாருங்க..

குங்கும பூவை சுக்கிர தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பயன்படுத்தினால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. மேலும் குங்கும பூவிற்கு பணத்தை ஈர்க்க கூடிய தன்மை அதிகமாக உள்ளது.

அதற்காக இந்த பரிகாரத்தை செய்வதோடு மட்டுமில்லமால் அதற்கான முயற்சிகளும் எடுக்க வேண்டும். அப்போது தான் கடன் தீர்ந்து செல்வ நிலை அதிகரிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement