லாப திருஷ்டி யோகம்
ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு கிரங்களின் பெயர்ச்சியை பொறுத்து தான் நம்முடைய நன்மை மற்றும் தீமைகள் அடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பெயர்ச்சியும் ஒவ்வொரு பலனை தர கூடியது. எல்லாருக்கும் எல்லா விதமான பலன்களும் கிடைக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. குரு பகவான் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவை தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அதே சமயம் புதன் பகவான் புத்திசாலித்தனம், வியாபாரம் பெருக்க, கல்வி போன்றவற்றிற்கு அடிப்படையாக இருக்கிறார். இன்றிலிருந்து அதாவது மே மதம் 5-ம் தேதி குரு பகவானும், புதனும் ஒன்று சேர்கிறார்கள். இத்தானில் லாப திருஷ்டி யோகம் நடவிருக்கிறது. இந்த யோகமானது 12 ராசிகளில் பார்வை பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே பலன்களை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
மகரம்:

குரு மற்றும் புதன் சேர்க்கையால் மகர ராசிக்காரர்களுக்கு எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். நீங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலம் வியாபாரம் ஆனது அதிகரித்து வருமானமும் அதிகரிக்கும். மேலும் இதுவரை இல்லாத லாபம் கிடைக்கும். திருமண ஆணவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் ரொம்ப நாட்களாக திருமண வரன் பார்த்து கொண்டிருந்து அவர்களுக்கு வரன் அமையவில்லை என்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு திருமண வரன் அமையும்.
குரு, ராகு, கேது பெயர்ச்சியால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது
மிதுனம்:
குரு மற்றும் புதன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் உங்களின் திறமையை வெளிப்டுத்துவீர்கள். இதன் மூலம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பணியில் பொறுப்புகள் ஆனது அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதனை நீங்கள் தகுந்தவற்றில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இதுவரை ஏதேனும் பிரச்சனை இருந்து அவர்களிடம் நல்லுறவு பராமரிக்காமல் இருந்தால் இந்த நேரம் அந்த பிரச்சனை ஆனது முடிவுக்கு வரும். மேலும் குடும்பத்தில் உள்ளவ்ர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வீர்கள்.
மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்டி யோகமானது நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவதற்கு அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் அதிர்ஷ்டம் கூட இருந்தாலும் அதனை நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும். உங்களுடைய காதல் வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மேலும் திருமானவர்கள் துணையிடம் நேரத்தை கழிப்பீர்கள். இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












