சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை..!

kubera poojai

லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை..! Kubera Poojai In Tamil..! 

kubera poojai: நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் செல்வத்தின் அதிபதியாக விளங்கும் லக்ஷ்மி குபேர பூஜை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். குபேரர் என்றாலே எல்லோர் மனதிலும் முதலில் தோன்றுவது செல்வம். எவரொருவர் ஏதேனும் தொழில் தொடங்கினாலும் அவர் தன்னுடைய அலுவலகம் அல்லது தொழில் நடத்தும் இடங்களில் குபேரனின் சிலையை வைப்பார்கள். குபேர சிலையை வைப்பதினால் செல்வம் செழிக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. குபேரன் சிலையை வழிபடுவதால் மட்டும் செல்வம் செழிக்காது, நாம் குபேர பூஜையை செய்ய வேண்டும். சரி வாங்க இப்போது குபேர பூஜையை எப்படி செய்யலாம் என்று படித்து அறியலாம்..!

newகுபேர விளக்கு ஏற்றும் முறை..!

குபேர பூஜை எப்போது செய்யலாம்:

kubera poojaiஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலம் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இந்த நேரத்தில் செய்யப்படும் குபேர பூஜையானது சிறப்பு வாய்ந்தது. குபேரர் தன்னுடைய அனைத்து செல்வத்தையும் இழந்து நிற்கும் பொழுது லட்சுமி தேவியை வணங்கி வழிபட்டான். இதனால் குபேரருக்கு அவர் கேட்ட அனைத்து காரியங்களும் கிடைத்தது.

பூஜையின் சிறப்பு:

நாம் எளிய முறையில் குபேரருக்கு விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் நம்முடைய தீராத கடன் தொல்லைகள் நீங்கிவிடும். செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.

குபேர பூஜையை இரண்டாண்டுக்கு ஒருமுறை செய்வதினால் வீட்டில் பண தட்டுப்பாடு நீங்கும்.

வட இந்தியாவில் தீபாவளி அன்று குபேரருக்கு தங்கம், வெள்ளி போன்ற பொற்காசுகள் வைத்து குபேர பூஜை செய்து வழிபாடுவார்கள்.

லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை:

kubera poojai

ஒவ்வொரு கட்டத்தில் உள்ள எண்களின் மீது ஒரு ரூபாய் நாணயம் தெரியும் வகையில் வைக்க வேண்டும். பின் அந்த மரப்பலகையில் எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும்.

ஒவ்வொரு நாணயத்தின் மீதும் மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்லி பூஜையை வழிபட வேண்டும்.

சுலோகம் செல்லும்போது ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைக்க வேண்டும். மீதமுள்ள பூவினை குபேர படத்திற்கு போடவேண்டும்.

இந்த குபேர பூஜையை பய பக்தியுடன் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்த பின்னர், கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குபேர பூஜையால் வீட்டில் செல்வம் பெருகி கஷ்டங்கள் அகன்றுவிடும்.

குபேர மூலையில் என்ன வைக்கலாம்

குபேரருக்கு உகந்த மலர்:

kubera poojaiதாமரை மலர் குபேரருக்கு உகந்த மலராகும். குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என்ற ஸ்லோகத்தினை 108 முறை குபேர பூஜையில் தாமரை மலர்களைத் தூவி பூஜை செய்ய வேண்டும்.

குபேர பூஜை மந்திரம்:

குபேர பூஜை தொடங்கும் முன் தெரிந்த விநாயகர் துதிப் பாடலைப் பாடி பூஜையைத் தொடங்க வேண்டும். விநாயகர் துதி பாடலை பாடிய பிறகு மகாலட்சுமியை வணங்கி, போற்றி வழிபட வேண்டும். பின்பு குபேர மந்திரத்தை சொல்ல வேண்டும்.

1.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!

2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச
குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய
ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!

4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!

5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!

6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!

7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!

8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!

9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!

10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!

11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!

12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!

13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!

14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!

15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!

16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய
தேவாய நமஹ!

பூஜை உணவு:

குபேர பூஜைக்கான ஸ்லோகங்களை சொல்லி முடித்த பிறகு நைவேத்தியம், இனிப்பு, பால் பாயாசம் மற்றும் பலகாரங்களை படைத்து பூஜை முடித்து விட வேண்டும்.

குபேர பூஜையை மற்ற நாட்களில் செய்வதை விட தீபாவளி அன்று செய்து வந்தால் வீட்டில் மகாலட்சுமி குடிபுகுந்து சகல ஐஸ்வரியம் கிடைக்கும். வீட்டில் பண கஷ்டங்கள் உள்ளவர்கள் குபேர பூஜையை செய்து வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவரலாம்.

newவீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்