Lakshmi Varai En Illame Lyrics in Tamil
பொதுவாக ஆன்மீகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் எண்ணற்ற கருத்துக்களை கூறுவார்கள். அதேபோல் இன்னமும் கூட எண்ணற்ற செயலை ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது போல செய்து வருவார்கள். அந்த வகையில் பார்த்தால் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை, செல்வ வரவையும் அதிகரிக்கச் செய்வது லட்சுமி தேவி தான் என்று ஒவ்வொரு வீட்டில் உள்ள பெரியவர்களும் கூறுவார்கள். அதோடு மட்டும் இல்லாமல் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு என இத்தகைய தினங்களில் பூஜை வழிபாட்டினையும் செய்வார்கள். அதிலும் ஒரு சில ஏதாவது பிரசாதத்தை செய்து வைத்தும் வழிபட்டு மற்றவர்களுக்கு அதனை பகிர்ந்து கொடுப்பார்கள். இவற்றை எல்லாம் சரியான முறையில் செய்தாலும் கூட தெய்வங்களை வழிபடும் போது அவர்களுக்கு என்று உள்ள மந்திரம் மற்றும் பாடல் வரிகளை கூறுவது மிகவும் நல்லது. எனவே இன்று லட்சுமி வாராய் என் இல்லமே பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம்.
லட்சுமி வாராய் என் இல்லமே பாடல்:
லக்ஷ்மி வாராய் என் இல்லமே
பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
சூச்சுமமான பேறு பதினாறு
சுந்தரி தாராய் துளசியினோடு
குங்கும பச்சை கஸ்தூரி
எங்கும் கோரூர் ஜனமே தூவி
தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
நறுமண சந்தனம் தாம்பூலம்
ஆரத்தி தூபம் சாம்பிராணி
திருமகளே உன் விருப்பம் யாவும்
ஒருமனதாக சமர்ப்பித்தோம்
மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
பஞ்சவேல் வதனம் பூரணகும்பம்
செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
கொஞ்சமளித்தோம் பாதமடி
குண்டுமல்லிகை செவ்வரளி
செண்டுடன் பாதிரி செண்பகமும்
கண்டு பறித்து சந்ததமே
கொண்டு பூஜித்தோம் உன் பதமே
ஆவணி மாத வளர்பிறையில்
ஆவணச் சுக்ர வாரமதில்
தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
சீருடை தொழுதோம் பூத்தூவி
சிவபுராணம் பாடல் வரிகள் |
மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் |
நாம இராமாயணம் பாடல் வரிகள் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |