Lakshmi Yogam Palangal in Tamil
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் மட்டுமின்றி இவற்றின் இயக்கங்கள், அஸ்தமம், உதய நிலைகள் என பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றத்தால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பாதிப்புகள் மற்றும் நன்மைகளை ஏற்படுத்துகின்றன. அதாவது இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கின்றன. இதே போல் இந்த மாத இறுதியில் சுக்கிரன் கிரகமும் தன் நிலையை மாற்றி கொள்ள போகிறார். இதன் காரணமாக லட்சுமி யோகம் உருவாக போகிறது. இந்த லட்சுமி யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
சுக்கிர பெயர்ச்சி லட்சுமி யோகத்தால் லாட்டரி அடிக்க போகும் 5 ராசிக்காரர்கள்:
இந்த மாத இறுதியில் மே 30-ம் தேதி ஏற்படும் சுக்கிர பெயர்ச்சி லட்சுமி யோகத்தால் அபரிமிதமான நற்பலன்கள் அடைய போகின்ற அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றியும் அவர்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
கடக ராசி:
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரன் கடக ராசியில் தான் பெயர்ச்சியாக உள்ளார். அதனால் இந்த கால கட்டத்தில் உங்களின் ஆளுமை திறன் அதிக அளவு வெளிப்படும். பணி புரிபவர்களுக்கு தங்களின் திறமை பாராட்டப்பட்டு அதற்கேற்ப உங்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சுயதொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு அதில் அளவு லாபம் கிடைக்க போகின்றது.
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் ஜாக்போர்ட் அடிக்க போகுது
விருச்சிக ராசி:
இந்த கால கட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் சில பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த சந்திப்பு உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அள்ளி தரும். மேலும் இந்த சுக்கிர பெயர்ச்சி லட்சுமி யோகத்தால் நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை அடையும்.
மேலும் வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் விருப்பங்கள் இந்த கால கட்டத்தில் நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நிகழ வாய்ப்புள்ளது. திருமணமானவர்களுக்கு இந்த கால கட்டத்தில் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மகர ராசி:
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிர பெயர்ச்சியால் லட்சுமி யோகம் உருவாகப் போகின்றது. இந்த கால கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வெற்றியையும் அள்ளித்தர போகின்றது.
இவர்கள் இந்த கால கட்டத்தில் புதிய புதிய சொத்து மற்றும் வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். இந்த காலம் மகர ராசிக்காரர்களின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி உச்சத்தில் இருக்கும். காதலர்களுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைத்து திருமணம் நிச்சயமாகும். மேலும் இந்த நேரத்தில் நீங்கள் பெயரும் புகழும் அடைவீர்கள், சமுதாயத்தில் கவுரவம் அதிகரிக்கும்.
மேஷ ராசி:
இந்த சுக்கிர பெயர்ச்சி லட்சுமி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் மிகுந்த அனுகூலமான பலன்களைப் பெற போகின்றார்கள். மேலும் இந்த கால கட்டத்தில் இவர்கள் நிலம், வாகனம், வீடு போன்றவற்றை வாங்கும் யோகம் உள்ளது.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி திரும்பும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
மிதுன ராசி:
ஜோதிட சாஸ்திரத்தின் படி சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான சுப பலன்களும், பண ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும்.
இந்த நேரத்தில் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதல் விவகாரங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் அங்கீகாரம் கிடைக்கும். இத்தகைய சூழ்நிலையில், செலவுகள் அதிகமாக இருக்கும் மற்றும் சேமிப்பதும் கடினமாக இருக்கும்.
வக்ர சனி வாரி வழங்கும் பலன் இந்த ராசிக்காரவங்க உங்களுடைய அதிர்ஷ்டத்தை வாங்க தயாராகிக்கோங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |