வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகள் | Lalitha Navarathna Malai Lyrics in Tamil..!

Updated On: June 16, 2023 4:58 AM
Follow Us:
lalitha navarathna malai lyrics in tamil
---Advertisement---
Advertisement

Lalitha Navarathna Malai Lyrics 

ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள்களின் மீது நம்பிக்கை இருக்கும். அதனால் அந்த கடவுளை மனதில் நினைத்து வழிபட்டு கொண்டிருப்பார்கள். இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கடவுளை நினைத்து வழிபட்டு கொண்டிருக்கின்றோமோ அதற்கு என்று உள்ள மந்திரம் மற்றும் போற்றிகளையும் உச்சரிப்போம். அந்த வகையில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளது. அதனால் இன்று ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

Lalitha Navarathna Malai Lyrics in Tamil:

காப்பு, வைரம், முத்து, பவளம், மாணிக்கம், நீலம், கோமேதகம், மரகதம், வைடூரியம் மற்றும் பதுமராகம் என 10 லலிதா நவரத்தின மாலை பாடல் வரிகளை கீழே ஒன்றன் கீழ் ஒன்றாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

காப்பு:

ஆக்கும் தொழில் ஐந்து அரன் ஆற்ற நலம்பூக்கும்
நகையாள் புவனேஸ்வரி போல் சேர்க்கும் நவரத்தின
மாலையினைக் காக்கும் கண நாயக வாரணமே!

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முத்து:

முத்தேவரும் முத்தொழில் ஆற்றிடவே முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸினியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணை வாழ்வு உடையேன் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

மாணிக்கம்:

காணக் கிடையாக் கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாக் பொலிவானவளே புனையக் கிடையாப் புதுமைத் தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

வைரம்:

கற்றும் தெளியார் காடே கதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நிலை எண்ணில் அவம் பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருள் கணையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

பவளம்:

அந்தி மயங்கிய வான விதானம் அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர் தேன் பொழிலாம் இது செய்தவள் யாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவருக்கு அருள் எண்ணம் மிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருள் ஆனாள் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

மரகதம்:

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ச்ருதி ஜதி லயமே இசையே சரணம்
அர ஹர சிவ என்று அடியவர் குழும் அவர் அருள் பெற அருள் அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

பத்மராகம்:

ரஞ்சினி நந்தினி அங்கணி பதும ராகவி காஸவி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்கிருத பூரணி அம்ருத ஸ்வ‌ரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு சிருங்க நிவாஸினி மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

கோமேதகம்:

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல் யாழ் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

நீலம்:

மூலக் கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்
கோல கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்று எளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரீ வருவாய் வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

வைடூரியம்:

வலை ஒத்த வினை கலை ஒத்த மனம் மருளப் பறையாறு ஒலி ஒத்த விதால்
நிலையற்று எளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைய‌ற்று அசைவற்று அநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே.

சத்தியநாராயண 108 போற்றி

சனி பகவான் 108 போற்றி

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now