Left Eye Twitching for Female Astrology Meaning in Tamil
மனிதர்களிடம் நம்பிக்கை என்பது அதிகமாக காணப்படும். சில விஷயங்களை நம்புவதால் அதனை மூட நம்பிக்கை என்று கூறுகின்றனர். மூட நம்பிக்கை என்று சொன்னாலும் கூட அந்த நம்பிக்கை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. உதாரணமாக நாம் வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்று நினைத்து வீட்டிற்குள் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்த பிறகு தான் வெளியே செல்வார்கள்.
இப்படி இருக்கையில் பல பெருக்கு கண்கள் துடிக்கும், இதனை சில பேர் சத்து குறைபாடு என்று கூறுவார்கள், ஆனாலும் இதில் ஆன்மிகத்தில் பல விஷயங்கள் உணர்த்துகின்றது. அதனால் இந்த பதிவில் பெண்களுக்கு இடது கண் துடித்தால் ஆன்மிகத்தில் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பெண்களுக்கு வலது கண் துடித்தால்:
பெண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லதல்ல, அவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகளில் கூட தவறுகள் ஏற்படும், இதனால் மற்றவர்களிடம் பேச்சுக்களை வாங்குவார்கள். மேலும் உங்களுக்கு கெட்ட செய்திகள் வரும், இதனால் கவலை அடைவீர்கள்.
இடது கண் துடித்தால்:
பெண்களுக்கு இடது கண் துடித்தால் மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது. உங்களுடைய குடும்பத்தில் நல்ல செய்திகள் வரும், மனதானது அமைதியாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.
பெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..!
ஆண்களுக்கு வலது கண் துடித்தால்:
ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்ல காரியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் போன்றவற்றில் நல்ல செய்திகள் வரும்.
இடது கண் துடித்தால்:
உங்களுக்கு இடது கண் துடித்தால் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவை கெட்ட சகுனமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
கண் இமை துடித்தால்:
உங்களுடைய கண்ணின் மேல் இமை துடிப்பதாக இருந்தால் உங்களின் உறவினர் யாராவது இறந்த செய்திவரும்,அதுவே வலது கண் இமை துடித்தால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் புதிய நட்பு அல்லது புதிய நபரை சந்திப்பீர்கள்.
சீன ஜோதிடம் கூறுவது:
சீன ஜோதிடத்தின் படி, ஆண்களுடைய இடது மற்றும் வலது கண் துடிப்பது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது,. மேலும் அதிர்ஷ்டமானாதாக பார்க்கப்படுகிறது. அதுவே இடது கண் துடித்தால் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. இதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் பிரச்சனைகள் வந்து சேருமாம். வலது கண் துடித்தால் நன்மை வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கோவிலை எத்தனை முறை சுற்றினால் நல்லது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |