Chaturgrahi Yoga in Astrology in Tamil
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்து 12 ராசிகளுக்கான வாழ்கை முறை அமைப்பும், ராசிபலன்களும் கூறப்படுகிறது. கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். இதனால் மனிதனின் வாழ்க்கையில் பல சுப பலன்களும் அசுப பலன்களும் உண்டாகும். அதேபோல், ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் பெயர்ச்சி இருக்கும் போது அது ஒரு சில ராசிகளுக்கு நற்பலன்களையும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. அதாவது துலாம் ராசியில் 4 கிரங்களின் பெயர்ச்சி உண்டாகப்போகிறது. இதனால் துலாம் ராசியில் சதுர்கிரக யோகம் உருவாகிறது. எனவே சதுரகிரக யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Libra Yoga Chaturgraha Yoga 2023 in Astrology in Tamil:
கன்னி ராசி:
சதுர்கிரக யோகம் கன்னி ராசியின் இரண்டாவது வீட்டில் நிகழ உள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் நிதிநிலைமையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். இக்காலத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பணியிடத்தில் முன்னேற்றகரமான சூழ்நிலை நிலவும். வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவார்கள். மேலும், நீண்ட நாட்களாக தடையில் இருந்த காரியங்கள் அனைத்தும் இக்காலத்தில் நல்லபடி முடிவுக்கு வரும். உங்களின் சுயமரியாதை அதிகரித்து காணப்படும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
மிதுன ராசி:
சதுர்கிரக யோகம் மிதுன ராசியின் ஐந்தாவது வீட்டில் நிகழ உள்ளது. இதனால் மிதுன ராசிக்காரர்கள் இக்காலத்தில் நற்பலன்களை பெற போகிறார்கள். வருமானத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். வியாபரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். அதேபோல், வேலை செய்பவர்களின் வருமானமும் அதிகரிக்கும்.
மகர ராசி:
சதுர்கிரக யோகம் மகர ராசியின் பத்தாவது வீட்டில் நிகழ உள்ளது. இதனால் மகர ராசிக்காரர்கள் இக்காலத்தில் பணியிடத்தில் பதவி உயர்வையும் சம்பள உயர்வு போன்ற அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள். மேலும், பணியிடத்தில் உங்களுக்கான பணிகளை விரைவில் முடித்து பாராட்டை பெறுவீர்கள். வியாபரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களின் நீண்ட கால ஆசை இக்காலத்தில் நிறைவேற வாய்ப்புள்ளது. மேலும், சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உண்டாகும்.
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |