Lingam 108 Potri | Sivan 108 Lingam Potri in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கடவுளை வணங்குவார்கள். அப்படி வணக்கம் கடவுள்களில் சிவனும் ஒரு கடவுளாக இருக்கிறார். கடவுளை வணங்கும் போது அவர்களுக்குரிய பாடல்கள், போற்றிகள், மந்திரங்களை கூறி வழிபடுவதால் அவரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நம்முடைய பதிவில் ஒவ்வொரு கடவுளுக்குரிய மந்திரங்கள், போற்றிகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சிவன் லிங்கத்திற்குரிய போற்றிகளை பற்றி அறிந்து கொள்வோம். அதாவது பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று வழிபாடும் போது இந்த போற்றிகளை கூறுவது சிறப்புக்குரியதக இருக்கிறது. சரி வாங்க பதிவினுள் செல்லவும்.
108 சிவலிங்கம் போற்றி:

ஓம் சிவ லிங்கமே போற்றி
ஓம் அங்க லிங்கமே போற்றி
ஓம் அபய லிங்கமே போற்றி
ஓம் அமுத லிங்கமே போற்றி
ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
ஓம் அனாயக லிங்கமே போற்றி
ஓம் அகண்ட லிங்கமே போற்றி
ஓம் அக்ஷர லிங்கமே போற்றி
ஓம் அப்பு லிங்கமே போற்றி
ஓம் ஆதி லிங்கமே போற்றி
ஓம் ஆதார லிங்கமே போற்றி
ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி
ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி
ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி
ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி
ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
ஓம் உக்ர லிங்கமே போற்றி
ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி
ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
ஓம் கனக லிங்கமே போற்றி
ஓம் காருண்ய லிங்கமே போற்றி
ஓம் காசி லிங்கமே போற்றி
ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
ஓம் காளத்தி லிங்கமே போற்றி
ஓம் கிரி லிங்கமே போற்றி
ஓம் குரு லிங்கமே போற்றி
ஓம் கேதார லிங்கமே போற்றி
ஓம் கைலாச லிங்கமே போற்றி
ஓம் கோடி லிங்கமே போற்றி
ஓம் சக்தி லிங்கமே போற்றி
ஓம் சங்கர லிங்கமே போற்றி
ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி
ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
ஓம் சம்ஹார லிங்கமே போற்றி
ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி
ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி
ஓம் சாந்த லிங்கமே போற்றி
ஓம் தியான லிங்கமே போற்றி
ஓம் சித்த லிங்கமே போற்றி
ஓம் சிதம்பர லிங்கமே போற்றி
ஓம் சீதள லிங்கமே போற்றி
ஓம் சுத்த லிங்கமே போற்றி
ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
ஓம் சுந்தர லிங்கமே போற்றி
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி
ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி
ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி
ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி
ஓம் ஸ்திர லிங்கமே போற்றி
ஓம் சைதன்ய லிங்கமே போற்றி
ஓம் ஜய லிங்கமே போற்றி
ஓம் ஜம்பு லிங்கமே போற்றி
ஓம் ஜீவ லிங்கமே போற்றி
ஓம் ஜோதி லிங்கமே போற்றி
ஓம் ஞான லிங்கமே போற்றி
ஓம் தர்ம லிங்கமே போற்றி
ஓம் தாணு லிங்கமே போற்றி
ஓம் தேவ லிங்கமே போற்றி
ஓம் நடன லிங்கமே போற்றி
ஓம் நாக லிங்கமே போற்றி
ஓம் நித்ய லிங்கமே போற்றி
ஓம் நிர்மல லிங்கமே போற்றி
ஓம் பர லிங்கமே போற்றி
ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி
ஓம் பத்ரி லிங்கமே போற்றி
ஓம் பக்த லிங்கமே போற்றி
ஓம் பாபநாச லிங்கமே போற்றி
ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி
ஓம் பிராண லிங்கமே போற்றி

ஓம் பீஜ லிங்கமே போற்றி
ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி
ஓம் பிரகாச லிங்கமே போற்றி
ஓம் புவன லிங்கமே போற்றி
ஓம் பூத லிங்கமே போற்றி
ஓம் பூர்ண லிங்கமே போற்றி
ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி
ஓம் மரகத லிங்கமே போற்றி
ஓம் மஹா லிங்கமே போற்றி
ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி
ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி
ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி
ஓம் முக்தி லிங்கமே போற்றி
ஓம் மூல லிங்கமே போற்றி
ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
ஓம் மேரு லிங்கமே போற்றி
ஓம் மோன லிங்கமே போற்றி
ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி
ஓம் யக்ஞ லிங்கமே போற்றி
ஓம் யோக லிங்கமே போற்றி
ஓம் ராம லிங்கமே போற்றி
ஓம் ராஜ லிங்கமே போற்றி
ஓம் ருத்ர லிங்கமே போற்றி
ஓம் வாயு லிங்கமே போற்றி
ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
ஓம் விசித்திர லிங்கமே போற்றி
ஓம் வீர்ய லிங்கமே போற்றி
ஓம் வேத லிங்கமே போற்றி
ஓம் வைத்ய லிங்கமே போற்றி
ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி
ஓம் லிங்கோத்பவனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
லிங்கம் 108 சொல்லும் முறை:
காலை எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடையை அணிந்து நேர்மறை எண்ணங்களுடன் பூஜை அறைக்கு செல்ல வேண்டும். அடுத்து பூஜைக்கு தேவையான விளக்கு, பூ, பிரசாதம் போன்றவை தயாரி செய்ய வேண்டும். அடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும், பால், தயிர், தேன், வில்வம், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து லிங்கம் 108 போற்றிகளை கூற வேண்டும். இதனை கூறும் போது பூவை கொண்டு லிங்கத்திடம் தூவி கூறுவது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பூஜை முடிந்த பிறகு தீவார்த்தனை காட்டி லிங்கத்திடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்ள வேண்டும்.
லிங்கம் 108 சொல்வதானால் கிடைக்கும் நன்மை:
லிங்கம் 108 போற்றிகளை கூறுவதானால் பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும்.
உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனைகள் நீங்கும், ஆயுள் நீடிக்கும்.
தொழில் மற்றும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
ராகு கேது தோஷங்கள் ஏதும் இருந்தால் அவை நீங்கும்.
ஆன்மிக உணர்வு அதிகரிக்கும்.
எங்கே சென்று சொல்லலாம்:
சிவன் கோவிலில் அல்லது வீட்டிலேயே செய்யலாம். நீங்கள் இந்த போற்றியை முழு பக்தியுடன் சொல்ல வேண்டும். எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களுடன் சொல்ல வேண்டும். இந்த போற்றியை திங்கட்கிழமை, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி போன்ற நாட்களில் சொல்வதன் மூலம் சிவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி பாடல் வரிகள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












