லிங்காஷ்டகம் பாடல் வரிகள் | Lingashtakam Lyrics in Tamil

Advertisement

Lingashtakam Lyrics in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  கஷ்டம் வரும் போதெல்லாம் நமக்கு பிடித்த இறைவனை மனதில் நினைத்து கொம்டு பிரார்த்தனை செய்வோம். அதில் சிவனின் அருள் கிடைத்து விட்டால் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் எளிதாக கடந்து விடலாம். சிவபெருமானை வழிபட்டால் மட்டும் போதாது, அதற்கான சுலோங்களையும் சொல்ல வேண்டும். அதிலும் பிரதோஷம் அன்று இந்த பதிவில் கூறியுள்ள சுலோகங்களை சொல்லி வருவதால் சிவனின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.

லிங்காஷ்டகம் தமிழ்  பாடல் வரிகள்:

லிங்காஷ்டகம் தமிழ்  பாடல் வரிகள்

ப்ரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம்

சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம்

பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்

காமனை எறித்த கருணாகர லிங்கம்

இராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்

வளர் அறிவாகிய காரண லிங்கம்

சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்

தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்

தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்

பங்கஜ மாலையை சூடிய லிங்கம்

தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் !!

தேவ கணங்களின் அர்ச்சனை லிங்கம்

தேடிடும் பக்தியில் வூரிடும் லிங்கம்

சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

எட்டு தளத்தினுள் எழுந்திடும் லிங்கம்

எல்லாமாகிய காரண லிங்கம்

எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

தேவரின் உருவில் பூஜைக்கும் லிங்கம்

தேவ வனமலரை ஏற்றிடும் லிங்கம்

பரமநாதனாய் பரவிடும் லிங்கம்

நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்!!

லிங்காஷ்டகம் இதனை தினமும் சிவ சன்னதியில் சொல்வார்

சிவலோக காட்சியுடன் சிவனருளும் கொள்வார்….

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….

லிங்காஷ்டகம் சமஸ்கிருதம்   பாடல் வரிகள்:

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்

பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்குமசந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்

ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்

பரமபர பரமாத்மக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள

சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

முருகனை போற்றி ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள்..!

திருவாசகம் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

Advertisement