குபேரன் பிறந்த ராசி
இந்து மதத்தில் பணவரவின் அடையாளமாக லட்சமி தேவியை தான் பார்க்கிறார்கள். லட்சுமி தேவியை வணங்குவதோடு குபேரனையும் சேர்த்து வணங்கினால் அந்த வீட்டில் செல்வ வளத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. குறையாத செல்வத்திற்கு குபேரனை வழிபட வேண்டும். ஜோதிடத்தில் சில ராசிக்காரர்களுக்கு பிறந்ததில் இருந்தே குபேரனின் அருள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி குபேரனின் அருள் இருப்பதால் அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் சந்திக்க மாட்டார்கள். அப்படி பிரச்சனை வந்தாலும் அதனால் சமாளிக்க கூடிய திறமை அவர்களிடம் இருக்கும். சரி வாங்க குபேரரின் அருள் கிடைத்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
குபேரரின் அருள் பெற்ற ராசிக்காரர்கள்:
மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் குபேரரின் அருள் இருப்பதால் பணத்திற்கு பஞ்சேமே இருக்காது. இவர்களிடம் பொருளாதார பிரச்சனை ஏற்படாது. பணத்தை சேமிப்பதிலும் வல்லவராக இருப்பார்கள்.
விருச்சிகம்:
குபேரரின் அருள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உள்ளது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடையவர்கள் எந்த செயலையும் தைரியமாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். குபேரரின் அருள் இருப்பதால் இவர்களிடம் பண பற்றாக்குறையே ஏற்படாது. வெளிவட்டாரத்தில் மதிக்க கூடியவர்களாக இருப்பார்கள். நீங்கள் எந்த துறையில் வேலை பார்த்தாலும் அதில் சிறந்து விளங்குவீர்கள்.
சனி வக்ர பெயர்ச்சியின் அதிர்ஷ்ட மழை…குடை வேண்டாம் பை எடுத்து செல்லுங்கள் அள்ளி வரலாம்..
துலாம்:
துலாம் ராசிக்காரர்களின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கும் குபேரரின் அருள் கிடைத்துள்ளது. இவர்களுக்கு குபேரரின் அருள் இருப்பதால் எப்பொழுதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியை காண்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குபேரரின் அருள் முழுமையாக கிடைக்கிறது. இவர்கள் எந்த வேலையே எடுத்தாலும் வெற்றியை அடையாமல் விட மாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை ஏற்படாது, அப்படியே ஏற்பட்டாலும் அதனால் சமாளிக்க கூடிய திறமை இவர்களிடம் காணப்படும். இவர்கள் எந்த செயலையும் வெற்றியை அடைவதோடு லாபமும் அதிகரிக்கும்.
இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |