வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ராகுவோடு சேரும் சுக்கிரன்..! வீட்டு வாசலில் நிற்கிறது அதிர்ஷ்டம்..! உள்ளே அழைக்கப்போகும் ராசிகள்..!

Updated On: April 15, 2024 1:12 PM
Follow Us:
Lucky Signs Due To Conjunction Of Rahu Venus in Tamil
---Advertisement---
Advertisement

ராகுவோடு சேரும் சுக்கிரன் | Lucky Signs Due To Conjunction Of Rahu Venus in Tamil

பொதுநலம் பதிவின் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! இன்று நம் பதிவின் வாயிலாக ராகு சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. அதுபோல இந்த 12 ராசிகளிலும் கிரகங்களின் மாற்றம் என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது மற்ற ராசிகளுக்கு நன்மைகளும் தீமைகளும் உண்டாகின்றன.

அந்த வகையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைந்தார்.  அதுமட்டுமில்லாமல், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை இந்த ராசியில் தான் பயணம் செய்வார். அதற்கு பிறகு மேஷ ராசிக்கு மாறுகிறார். மேலும் தற்போது மீன ராசியில் இருக்கும் ராகு பகவானோடு ஒன்று சேர்ந்து சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் லட்சுமி நாராயண யோகம், மாளவ்யா யோகம், விபரீத ராஜயோகம் என்று 3 யோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று பார்க்கலாம் வாங்க..!

புத்தாண்டில் எதை தொட்டாலும் வெற்றி.. அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார்..

ராகு சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் உண்டாகும் ராசிகள்: 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் தான் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் மற்றும் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அப்படி இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் தான்  சுக்கிர பகவான். அந்த வகையில் தற்போது ராகு சுக்கிரன் சேர்க்கையால் 3 யோகங்கள் உருவாகிறது. இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம் வாங்க.

சிம்ம ராசி:

ராகு சுக்கிரன் சேர்க்கையானது உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால், உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகப்போகிறது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி வளர்ச்சி உயர்ந்து கொண்டே செல்லும். சிம்ம ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெறுவீர்கள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்களின் 10 ஆம் வீட்டில் தான் ராகு சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது. ராஜயோகங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப்போகிறது. வியாபாரம் செய்யும் மிதுன ராசியினருக்கு லாபம் அதிகமாக கிடைக்கும். இந்த நேரத்தில் வீட்டில் செல்வம் அதிகமாக பெருகும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி ராசி:

ராகு சுக்கிரன் சேர்க்கையானது கன்னி ராசிக்காரர்களின் 7 ஆம் வீட்டில் தான் நிகழ்ந்துள்ளது. இதனால் சிறப்பான பலன்களை பெறப்போகிறீர்கள். வேலை செய்யும் கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வேலை செய்யும் இடங்களில் பாராட்டுகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

கடக ராசி:

கடக ராசியில் பிறந்தவர்களின் 9 ஆம் வீட்டில் தான் ராகு சுக்கிரன் சேர்க்கை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்த்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கப் போகின்றார்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உங்களை தேடி வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் முன்னேற்றத்தை தரும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now